சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள்
சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள், விகடன் பிரசுரம், சென்னை, விலை 95ரூ.
பிரபல எழுத்தாளர்களின், சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து வெளியிடுவதில் விகடன் பிரசுரம் ஈடுபட்டுள்ளது. இப்போது புதுமைப்பித்தன், லா.ச.ராமாமிர்தம், கு. அழகிரிசாமி, அசாகமித்திரன், சூடாமணி ஆகியோரின் சிறுகதை தொகுதிகள் வெளிவந்துள்ளன. புதுமைப்பித்தன் தொகுதியில், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், பொன்னகரம், சிற்பியின் நகரம், நாசகாரக்கும்பல், நினைவுப்பாதை, காஞ்சனை உள்பட 20 சிறந்த சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. புதுமைப்பித்தன், அழகிரிசாமி தொகுதிகளின் விலை தலா ரூ.130. மற்ற தொகுதிகள் ஒவ்வொன்றின் விலை 95ரூ. சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த கதைகளைப் படிக்க நல்ல வாய்ப்பு. நன்றி: தினத்தந்தி, 24/3/2015.
—-
ஜெயந்தி சங்கர் நாவல்கள், காவ்யா, சென்னை, விலை 999ரூ.
தமிழ்நாட்டில் பிறந்த சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் எழுதிய ‘திரிந்தலையும் திணைகள்’ ‘குவியம்’ ‘மனப்பிரிகை’ ‘நெய்தல்’ ‘வாழ்த்து பார்க்கலாம் வா’ ஆகிய 5 நாவல்களின் தொகுப்பு. பின்னிணைப்பாக இந்த நூல்கள் பற்றிய ஆய்வுரைகளும், நாவல் ஆசிரியரின் பேட்டியும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 24/3/2015.