சிவில் சர்வீஸ் வழிகாட்டி நூல்

சிவில் சர்வீஸ் வழிகாட்டி நூல், Cooridinator Dr. Tarachand. Publication-TaTA MCGraw Hill. Eduvation Private Limited. New Delhi. பக். 1330, விலை 1195ரூ.

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்று, நம் நாட்டின் ஆட்சியாளர்களில் ஒருவராக உருவாக வேண்டும் என்பது படித்த நம் இளைஞர்களின் இலட்சிய நோக்காக உள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அண்மையில் இதற்கான பாடங்களையும் தேர்வு கேள்வி முறையையும் மாற்றி அமைத்துள்ளது. இதுவரை முதல் தாளில் இருந்த சோதனைப் பகுதி இரண்டாம் தாளில் தரப்படுகிறது. இரண்டாம் தாள், இயற்கையாகக் கற்றலில் உள்ள ஆர்வத் திறனை சொதனை செய்கிறது. எதனையும் சிறப்பாகச் செய்திடும் டாட்டா குழுமத்தின் டாட்டா மேக்ரா கில் புத்தக வெளியீட்டு நிறுவனம், இந்த மாற்றங்களின் அடிப்படையில், சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவோருக்கான வழிகாட்டி நூல்களைக் கொண்டு வந்துள்ளது. அவற்றில் முதல் கட்டத் தேர்வுக்கான ஜெனரல் ஸ்டடீஸ் முதல் தாள் நூல் அண்மையில் வெளியானது. டாட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ள இந்த நூலில், பல பாடப்பிரிவு தளங்களில் நூல்களை எழுதும் வல்லுநர் குழு விளக்ப்பாடங்களையும், கேள்விகளையும் பதில்களையும் வழங்கியுள்ளது. தகவல்களைப் பட்டியலிட்டு மட்டும் தராமல், எந்த திசைகளில் இருந்தெல்லாம் கேள்விகள் வரும் என்பதனை தேர்வு எழுதும் ஆர்வலர்கள் தெரிந்து, அவற்றை எதிர்கொள்ளும் வகையில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆர்வலர்கள் நாங்கள் கற்றதனைச் சோதனை செய்து பார்க்க பல்வேறு வினாத்தாட்களை கொள்குறி வினா (Objective Type Multiplaechoice Questions) வகையில் தயாரித்து வழங்கியுள்ளது. இதன் மூலம், இந்த தேர்வுக்கு முழுமையாக ஒருவர் தன்னைத் தயார் செய்துகொள்ள முடியும். யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஏற்படுத்தியுள்ள கீழ்காணும் மாற்றங்கள் அனைத்தையும் விரிவாகத் தரும் முதல் நூல் இதுவாகத்தான் இருக்கும். Indian Polity என்பது Indian Polity and Governance என மாற்றப்பட்டுள்ளது. Economic and Social Development என்ற பகுதி முற்றிலுமாக மேம்படுத்தப்பட்டு மாற்றப்பட்டுள்ளது. இந்த நூலில் முதல் முறையாக General Issues on Environmental Ecology என்ற பிரிவு இந்தத் துறை வல்லுநர்களைல் தொகுக்கப்பட்டு தேர்வுக்கேற்ற வகையில் வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 2011 வரையிலான தற்கால நிகழ்வுகள் இணைக்கப்பட்டுள்ளன. பொது அறிவுப் பிரிவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. -டாக்டர் பெ. சந்திர போஸ் நன்றி: தினமலர், 20/11/11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *