சீனத்தின் குரல்
சீனத்தின் குரல், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 25ரூ.
சீன நாட்டு வரலாற்றில் மகான் கம்பூஷியஸ் காலம் முதல் செஞ்சீனத்தலைவன் மா-சே-துங் காலம் வரையில் நடந்த நிகழ்வுகளின் சுருக்கத்தை சீனத்தின் குரல் என்ற தலைப்பில் நூலாசிரியர் சி.பி.சிற்றரசு தொகுத்துள்ளார். 20 மூல நூல்களிலிருந்து கடந்த 2500 ஆண்டுகளாக சீன நாடு எழுப்பிய குரல்களை, அனைவரும் படித்து தெரிந்து கொள்ளும்வகையில் எளிமையாக தொகுக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடந்த முக்கியமான பிரச்சினைகளை நுட்பமாகத் தெரிந்து கொள்ள உதவும் புத்தகமாகும்.
—-
பத்துப்பாட்டு பொருளடைவு, சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். சென்னை 78, விலை ரூ.350.
சிறந்த இலக்கிய ஆய்வாளரான ச.பொ.சீனிவாசன், முனைவர் பட்டத்துக்காக சங்க இலக்கியமான பத்துப்பாட்டை ஆராய்ந்து எழுதிய கட்டுரைகள், பத்துப்பாட்டு பொருளடைவு என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றுள்ளது. தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர்க்கும், சங்க இலக்கியங்களில் பற்று கொண்டவர்களுக்கும் இந்த நூல் மிகவும் பயன்படும். இதன் விலை ரூ.350. இதே நூலாசிரியர் பத்துப்பாட்டை இன்னொரு கோணத்தில் ஆராய்ந்து எழுதிய பத்துப்பாட்டில் வருணனை மரபுகள் என்ற நூலையும் இதே பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் விலை 225ரூ.
—-
தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள், பாவேந்தன் நினைவு அறக்கட்டளை, 41, காவேரி சாலை, கலாசேத்திரா காலனி, பெசன்ட் நகர், சென்னை 90, விலை 50ரூ.
தமிழில் பிழை இல்லாமல் எழுத இலக்கண அறிவை வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியம். அதிலும் நல்ல தமிழில் எழுத விரும்புவோர் ஒற்றுப்பிழைகளைத் தவிர்த்தல் அவசியம். அதற்கு வல்லினம் மிகு இடங்களையும், மிகா இடங்களையும் அறிந்துகொள்ள வேண்டும். அதற்கு மிக எளிய விதிகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் இந்த நூலில் விளக்கியுள்ளார். சிறிய நூலாக இருந்தாலும் சிறந்த நூல். நன்றி: தினத்தந்தி, 22/1/2014.