பத்துப்பாட்டு பொருளடைவு

பத்துப்பாட்டு பொருளடைவு, ச.பொ.சீனிவாசன், சேகர் பதிப்பகம், விலை 350ரூ. தமிழின் உயிர்நிலை இலக்கியங்களாக திகழ்வன சங்க இலக்கியங்கள். தமிர் மொழிக்கு செம்மொழி தகுதியையும், நிலைபேற்றையும் பெற்றுத்தந்த பெருமை, சங்க இலக்கியங்களுக்கு உண்டு. சங்க இலக்கியங்களை பொதுவான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்த அதிகமான நூல்கள் வெளிவந்துள்ளன. அவை போதுமானதாக இல்லை. தவிர, சொல்லடைவுகள், சொல், பொருள், வருமிடம் இலக்கணக் குறிப்பு இவற்றோடு நின்றுவிடுகின்றன. இத்தகைய தரவுகளின் தேவையை மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ள நூல்தான் “பத்துப்பாட்டு – பொருளடைவு” என்னும் ஆய்வு நூல். நன்றி: தினத்தந்தி, […]

Read more

சீனத்தின் குரல்

சீனத்தின் குரல், மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை 108, விலை 25ரூ. சீன நாட்டு வரலாற்றில் மகான் கம்பூஷியஸ் காலம் முதல் செஞ்சீனத்தலைவன் மா-சே-துங் காலம் வரையில் நடந்த நிகழ்வுகளின் சுருக்கத்தை சீனத்தின் குரல் என்ற தலைப்பில் நூலாசிரியர் சி.பி.சிற்றரசு தொகுத்துள்ளார். 20 மூல நூல்களிலிருந்து கடந்த 2500 ஆண்டுகளாக சீன நாடு எழுப்பிய குரல்களை, அனைவரும் படித்து தெரிந்து கொள்ளும்வகையில் எளிமையாக தொகுக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடந்த முக்கியமான பிரச்சினைகளை நுட்பமாகத் தெரிந்து கொள்ள உதவும் புத்தகமாகும்.   —- […]

Read more

பத்துப்பாட்டு-பொருளடைவு

பத்துப்பாட்டு-பொருளடைவு, முனைவர் ச.பொ. சீனிவாசன், சேகர் பதிப்பகம், பக். 552, விலை 350ரூ. உலக மொழிகள் அறியாத, திணைமரபு எனும் தனி உயர் தகுதிகளோ, இயல்பாகப் பெற்றுள்ளது தமிழ் மொழி ஒன்றுதானே. பழந்தமிழ் படைப்பிலக்கியங்களில் பத்துப்பாட்டு குறிப்பிடத்தக்க பனுவலாய்ப் போற்றப்பெறும் சிறப்புடையது. ஆய்வுக்கும் முற்றாக முழுமையாக தெளிவாக அறிந்து மகிழ்வதற்கும் அவ்வழியில் மேற்கொண்டு தொடர்வதற்கும், பல வகையான அடிப்படைக் கருவி நூல்கள் தேவைப்படுகின்றன. பழங்காலத்தார்க்கு வாய்க்காத, வளர்ச்சி விளக்கங்களை, நிகழ்காலத்தாரும், வருங்காலத்தாரும் எளிதில் கண்டு, இன்பம் காண வேண்டும் என்ற உயர் நோக்கில் உருவாக்கப் […]

Read more