பத்துப்பாட்டு-பொருளடைவு
பத்துப்பாட்டு-பொருளடைவு, முனைவர் ச.பொ. சீனிவாசன், சேகர் பதிப்பகம், பக். 552, விலை 350ரூ.
உலக மொழிகள் அறியாத, திணைமரபு எனும் தனி உயர் தகுதிகளோ, இயல்பாகப் பெற்றுள்ளது தமிழ் மொழி ஒன்றுதானே. பழந்தமிழ் படைப்பிலக்கியங்களில் பத்துப்பாட்டு குறிப்பிடத்தக்க பனுவலாய்ப் போற்றப்பெறும் சிறப்புடையது. ஆய்வுக்கும் முற்றாக முழுமையாக தெளிவாக அறிந்து மகிழ்வதற்கும் அவ்வழியில் மேற்கொண்டு தொடர்வதற்கும், பல வகையான அடிப்படைக் கருவி நூல்கள் தேவைப்படுகின்றன. பழங்காலத்தார்க்கு வாய்க்காத, வளர்ச்சி விளக்கங்களை, நிகழ்காலத்தாரும், வருங்காலத்தாரும் எளிதில் கண்டு, இன்பம் காண வேண்டும் என்ற உயர் நோக்கில் உருவாக்கப் பெற்றுள்ளது இந்த நூல். பத்துப்பாட்டின் வருணைனை, மரபுகள் எனும் ஆய்வுத் தொகுப்பைத் தந்துள்ளன. இந்நூலாசிரியர் பரவலான பார்வையுடன், ஆழமான அறிவுச் செல்வங்களை பரப்பி, நம்மைப் பிரமிக்கச் செய்கிறார். பத்துப்பாட்டின் பரிமாணங்கள் முழுவதையும் நம் பார்வைக்கு வைக்கிறார். வகைப்பாடும், தொகுப்பும் உழைப்பைக் காட்டுகின்றன. உவமைகள் கருப்பொருள்கள் உரிய பொருள்கள் எனும் அணி வகைகளின் சிறப்பு எண்ணி எண்ணி இன்புறலாம். நூலாசிரியர் உழைபபை பாராட்டி, படிப்போர் பயன் அடையலாம். -புலவர் ம. அய்யாசாமி. நன்றி: தினமலர், 29/12/13