சுந்தரகாண்டம்
சுந்தரகாண்டம், கிரி டிரேடிங் ஏஜென்சி, டி.எஸ்.வி.கோவில் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ.
இலங்கை மன்னன் ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை இலங்கை சென்று, சீதையைக் கண்டுபிடித்து அனுமன் வெற்றியுடன் திரும்புவதே சுந்தரகாண்டம். சக்கரவர்த்தி திருமகனான ராமபிரானின் கட்டளைப்படி சீதையைத் தேடி வந்த வானர படை தென் சமுத்திரக்கரை வந்து சேர்ந்தது. எங்ஞனம் கடலைத் தாண்டுவது என்று அவர்கள் கவலையில் சோர்ந்திருந்போது, ஜாம்பவான் ஆஞ்சநேயனுக்கு அவருள் உறைந்து கொண்டிருந்த அளப்பரிய செயலாற்றலை நினைவுபடுத்தி, புத்துணர்ச்சியுடன் வீறுகொண்டு எழச் செய்கிறார். அதனால் உத்வேகமடைந்த அனுமன் கடலைத்தாண்டி இலங்கை சென்று சீதையைக் கண்டுபிடித்து வெற்றியுடன் திரும்புகிறார். அசோகவனத்தில் சோகமே உருவாக இருந்த சீதைக்கு, அனுமனைப் பார்த்த பிறகுதான் தனது எதிர்காலம் ஒளிமயமாகும் என்ற நம்பிக்கை பிறந்தது. அத்தகைய ஆற்றல்மிகு அனுமனின் அற்புத பணிகள் நிரம்பிய சுந்தரகாண்டம், எளிய விளக்கவுரையுடன் படைக்கப்பட்டிருக்கிறது.
—-
ஆயுளை வளர்க்கும் பிராண சிகிச்சைகள், டாக்டர் ஜி. லாவண்யா, மேதூதன் பதிப்பகம், 7, சின்னப்ப ராவுத்தர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 65ரூ. பிராண சிகிச்சை மூலம் நோய் தீர்க்கும் முறைகள் குறித்த தகவல்கள் அடங்கிய நூல் இது. அலோபதி மருத்துவத்தில் உள்ள நவீன சாதனங்களை விடவும், மனித உடலின் அடிப்படைத் தன்மையை கொண்டு செயல்படும் பிராண சக்தி பரிசோதனை முறை அதிக நுட்பம் வாய்ந்தது என்று விளக்கியுள்ளார் ஆசிரியர்.
—-
மாந்தியின் மகத்துவம், அல்லூர் வெங்கட்ராமன், ஆனந்த நிலையம், 7/14, புதூர் முதல் தெரு, அசோக் நகர், சென்னை 83, விலை 100ரூ.
சனியின் 20 கிரகம் மாந்தி எனப்படும். மாந்தி, தனிக்கிரகமாகக் கணக்கிடப்படுவதில்லை. ஆனால் கேரளாவிலும், வட மாநிலங்களிலும் ஜாதகம் பார்க்கும்போது மாந்திக்கு முக்கியத்துவம் தருகின்றனர். ஜாதகத்தில் மாந்தியை குறிப்பிட வேண்டிய அவசியம் பற்றியும், அதனால் ஏற்படும் தோஷங்கள், நீக்குவதற்கான பரிகாரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/10/2013.