சுவடுகள் நெய்த பாதை

சுவடுகள் நெய்த பாதை(கவிதைகள்), பா. கிருஷ்ணன், தகிதா பதிப்பகம், விலை 60ரூ.

காட்சியை ஜெயித்த கவிதைகள்

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-209-1.html

பத்திரிகையாளரான பா. கிருஷ்ணன் சிறந்த கவிஞரும்கூட. அவரின் கவிதை ஆற்றலை நிரூபிக்க வந்திருக்கும் கவிதை நூல்தான் சுவடுகள் நெய்த பாதை. இந்தத் தொகுப்பை கவிதையாகவே நெய்வதற்குக் காரணமாய் புகைப்படங்களே அமைந்துள்ளது. ஒரு படத்துக்கு ஒரு கவிதை என அமைந்துள்ள இத்தொகுப்பில் எதற்கு எது ஆதாரம் எனக் கண்டுபிடிக்க முடியாதபடி திகைக்க வைக்கிறது. கண்ணுக்கும் கருத்துக்கும் இதமான பயணத்தைத் தருகிறது இக்கவிதைப்பாதை. ஒரு சுமைத்தூக்கியின் படத்துக்குக் கீழே சுமை தூக்கி சுமை தூக்கி சோர்ந்தே போனோம் சுமப்பதற்காகப் பிறந்ததுபோல் வாழ்ந்தே செத்தோம் அடுக்கடுக்காய் ஆயிரம்தான் சுமக்கும்போதும் அரைவயிறு சுமப்பதுவோ அதிகமில்லை -அமிர்தா. நன்றி: கல்கி,12/3/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *