சொப்பன சுந்தரி

சொப்பன சுந்தரி, வானவில் புத்தகாலயம், சென்னை, விலை 299ரூ.

பிரபல தெலுங் எழுத்தாளர் யத்தனபூடி சுலோச்சனா ராணி எழுதிய நாவல். தமிழில் கவுரிகிருபானந்தன் மொழிபெயர்த்துள்ளார். சேற்றில் பிறந்த செந்தாமரை மேனகா, தாயின் வாழ்க்கையில் நடந்த தடுமாற்றத்தால் சமுதாயம் அவர்களை மதிப்புக் குறைவாக நடத்துகிறது. மேனகா எதிர்பாராதவிதமாக நடிகையாகி விடுகிறாள். அவள் மனதார விரும்பிய ஹரி கிருஷ்ணாவுக்கும் ரேகாவுக்கும் திருமணம் நடக்கிறது. இந்த நிலையில் ரேகா இறந்து போகிறாள். ஹரி கிருஷ்ணன் மீது கொலை குற்றம் சாட்டப்படுகிறது. திகில்களும், திருப்பங்களும் நிறைந்த கதை. முடிவு என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடியாத அளவுக்கு கதையை நகர்த்திச் செல்கிறார் எழுத்தார். நூலின் விலை 299ரூ. இதே எழுத்தாள எழுதிய சீதா(வின்)பதி ரூ.250, புஷ்பாஞ்சலி ரூ.199, இதயவாசல் ரூ.199. நன்றி: தினத்தந்தி.  

—-

கலைஞர் பரணி கவிதை மலர்கள், கவிஞர் டாக்டர் காரை மு.வேணு, பத்மா பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.

கவிதையின் மீது நூலாசிரியர் கொண்டுள்ள அளப்பரிய ஆர்வத்தின் இனிய வெளிப்பாடே இந்த நூல். நன்றி: தினத்தந்தி.

Leave a Reply

Your email address will not be published.