சோசலிசம் தான் எதிர்காலம்

சோசலிசம் தான் எதிர்காலம், டாக்டர். ரெக்ஸ் சற்குணம், சிந்தன் புக்ஸ், விலை 200ரூ.

சமூகத்தின் வெவ்வேறு துறை சார்ந்தவர்கள் பெரும்பாலும் தங்கள் துறைக்கு வெளியே எட்டிப் பார்ப்பதும், சமூக நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொள்வதும் மிகவும் குறைவு. இவர்களிடமிருந்து டாக்டர் ரெக்ஸ் சற்குணம் மாறுபட்டவர். மருத்துவத் துறையிலும் மார்க்சியத்திலும் குறிப்பிடத் தகுந்த அளவில் இயங்கிக்கொண்டிருப்பவர். தான் கற்றுக்கொண்ட மார்க்சியத்தை மருத்துவத்துறையிலும் மக்கள் நல்வாழ்வைப் பேணும் நடவடிக்கைகளிலும் பயன்படுத்துபவர். முதலாளித்துவம் ஊதிப்பெருத்து ஏகாதிபத்தியமாகத் தலைவித்திதாடும் இந்தக் காலக்கட்டத்தில் ‘சோசலிசம்தான் எதிர்காலம்’ என்று இந்த நூலின் மூலம் டாக்டர் ரெக்ஸ் உரக்கச் சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில் மார்க்சிய இயக்கங்கள் மீதான விமர்சனத்தையும் இந்த நூலில் முன்வைத்திருக்கிறார். சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குக் காரணமாக அங்கு நிகழ்ந்த சோசலிசப்புரட்சி, சோசலிச ஜனநாயகமாக மாறாததைச் சுட்டிக்காட்டுகிறார். இப்படியான படிப்பினைகளைக் கருத்தில் கொண்டு சோசலிசத்தை முன்னெடுத்துச் செல்வது நம் காலத்தின் கட்டாயம் என்ற கருத்தைப் புத்தகத்தின் நெடுகிலும் டாக்டர் ரெக்ஸ் இழையோட விட்டிருக்கிறார். இந்த நூலுக்கு மார்க்சிய அறிஞர் பிரபாத் பட்நாயக் வழங்கிய அணிந்துரையும் முக்கியமானது. -ஆசை. நன்றி: தி இந்து, 28/11/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *