ஜமாஅத் கடந்து வந்த பாதை

ஜமாஅத் கடந்து வந்த பாதை (மூன்றாம் தொகுதி), தமிழில்-டி.அஜிஸ்லுத்புல்லாஹ், இஸ்லாமிக் பவுண்டேசன் டிரஸ்ட், பக். 432, விலை 160ரூ.

சுதந்திரத்திற்கு முன்பு பிரிக்கப்படாத இந்தியாவில் ஜமாஅத்தே இஸ்லாமி என்ற இயக்கம் முக்கிய பங்கு வகித்தது. 1945இல் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தின் மாநாட்டில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள், விவாதங்கள் குறித்த அரிய தொகுப்பு இந்நூல். தனிமனித ஒழுக்கம், ஆட்சி, சமூகத்தை கட்டமைத்தல் போன்றவற்றைப் பற்றி அந்த இயக்கம் என்ன விரும்புகிறது? அதனுடைய செயல்திட்டம், வழிமுறைகள் எவை என்பதே இந்நூல். நம்முடைய அழைப்பு என்ன? என்ற தலைப்பில் அதிகாரத்தை கைப்பற்றுவது மட்டும் நோக்கமல்ல, மாறாக தனிப்பட்ட வாழ்வு, கூட்டு வாழ்வு, அரசியல், பொருளாதாரம், குடும்பம் என்ற வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்த புரட்சியை இஸ்லாம் கொண்டு வர விரும்புகிறது என்பதை விளக்குகிறது. இஸ்லாமிய இயக்கங்களை நடத்துவதற்கான பாடமாகவும், தகவல் சுரங்கமாகவும் இந்நூல் அமைந்துள்ளது. நன்றி: தினமணி, 12/1/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *