வறட்சியிலும் வளமை
வறட்சியிலும் வளமை (லாபம் தரும் சிறுதானிய சாகுபடி), ஆர். எஸ். நாராயணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 136, விலை 100ரூ.
உணவுப் பயிர்களின் சாகுபடியில் குறைந்த அளவு நீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இந்நூல் விவரிக்கிறது. நாட்டின் மொத்தப் பரப்பளவில் 50 சதவிகித காடுகள் இருந்தபோது, மாதம் மும்மாரி மழை பொழிந்தது. ஆனால் தறேபாது பல்வேறு காரணங்களால் காடுகளின் மொத்தப் பரப்பளவு 10 சதவிகித அளவுக்குக் குறைந்துவிட்டது. இதனால், 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட மழை பெய்வதில்லை. குடிநீருக்கே அல்லாடும் நிலையில், பயிர்களுக்கு எவ்வாறு தண்ணீர் வழங்குவது, நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, அதிக மகசூல் பெறுவது எவ்வாறு என்பது இந்நூல் விளக்கப்பட்டுள்ளது. சிறு தானியப் பயிர்களைப் பயிரிட்டால் விவசாயிகள் லாபம் ஈட்டலாம். அவற்றின் தேவை அதிகமாக உள்ளது என்பதை நூலாசிரியர் தனித்தனி அத்தியாயங்களில் விளக்குகிறார். பசுமைப் புரட்சியால் நிலங்கள் பாழ்பட்டுள்ளதை விளக்கும் நூலாசிரியர், இயற்கை வேளாண்மையின் அவசியத்தையும் தெளிவுபடக் கூறுகிறார். கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான சில வழிமுறைகளும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. நூல் வடிவமைப்பு நேர்த்தியாக உள்ளது. பயிர் வகைகளின் படங்கள், அட்டவணைகள் நூலுக்கு மெருகூட்டுகின்றன. வேளாண் சார்ந்த படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள், அத்துறை சார்ந்தவர்களிடம் மட்டுமல்லாமல் அனைவரிடமும் இருக்க வேண்டிய நூல். நன்றி: தினமணி, 19/1/2015.