ஜெருசலேம் அழியா நகரத்தின் கதை
ஜெருசலேம் அழியா நகரத்தின் கதை, பா. முருகானந்தம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை 14, பக். 267, விலை 210ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-033-9.html
இன்றைய இஸ்ரேல் நாட்டின் தலைநகரமான ஜெருசலேம் நகரத்தின் ஏழாயிரம் ஆண்டு காலவரலாற்றுப் பின்னணியைப் பேசும் நூல் இது. கிறிஸ்தவர்களின் புண்ணிய பூமி ஜெருசலேம் என்ற பொதுவான நம்பிக்கையை தகர்த்து முஸ்லீம்களுக்கும் ஜெருசலேம் ஒரு புண்ணிய பூமி என்பதை நூல் விளக்குகிறது. இயேசு கிறிஸ்து இந்த நகரத்தில்தான் சிலுவையில் அறையப்பட்டார் என்பதால் கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலேம் புண்ணிய பூமி. அதேபோல் முகம்மது நபி மற்ற இறைத் தூதர்களை சந்தித்த தருணத்திலும், அவர் வான் நோக்கிப் பயணித்து சொர்க்கத்தில் இறைவனைத் தரிசித்து உரையாடிவிட்டு பிறகு மீண்டும் கீழிறங்கிய நிகழ்வு) எனப்படும் முக்கிய நிகழ்வு நடந்ததாக நம்பப்படும் இடமும் ஜெருசலேம் என்பதால் இஸ்லாமியார்களுக்கு இது மெக்கா, மதீனாவுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது புண்ணிய பூமி ஆகிறது. எகிப்து தேசத்திலே அடிமைப்பட்டு கிடந்த இஸ்ரேல் மக்களை இயேசு கிறிஸ்துவின் வல்லமையான வரங்களினால் மோசஸ் மீட்டு வனாந்திர வழியாக நடத்திக் கொண்டு கானான் தேசத்திற்கு வரும் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டு கால நிகழ்வு இந்த நூலில் ஒரு நாவல் போல எளிமையாக விளக்கப்பட்டு வாசிப்போரை ஈர்க்கிறது. ஒன்பது சிலுவைப் போர்கள் குறித்து பேசும் இந்த நூல் அடுத்து நடைபெற்ற போர்களை கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களும் இடையிலான மத ரீதியிலான போர்களே என்று விளக்குகிறது. இறுதியாக 20ஆம் நூற்றாண்டில் யூதர்களும், முஸ்லீம்களும் அவரவருக்கென தனிநாடு அமைப்பதற்காக கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொண்ட நடவடிக்கைகளும், இறுதியில் இஸ்ரேல், பாலஸ்தீனம் உருவானவிதமும் விளக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் நடைபெற்ற போர்கள், பயங்கரவாத தாக்குதவல்கள், பேச்சு வார்த்தைகள், வாக்குறுதி மீறல்கள் என ஒவ்வொரு சம்பவத்திலும் பாதிக்கப்பட்டது அப்பாவி மனிதர்கள் என்பதை நூல் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. இந்நூல் ஒரு வரலாற்றுப் பெட்டகம். நன்றி:தினமணி, 13/5/2013
—-
போகர் ஏழாயிரம் மருத்துவ விளக்கம், என். தாமோதரன், ஸ்ரீமுரளி பப்ளிகேஷன், 160, லஸ் சர்ச் ரோடு, சிந்தூர் டவர், மைலாப்பூர், சென்னை 4, விலை 125ரூ.
மூலிகைகள் வாயிலாக நோய்களை குணப்படுத்த மருத்துவ விளக்கம் அடங்கிய நூல், போகர் 7 ஆயிரம் சுருக்கு இதில் 7 காண்டமாக அதாவது சப்தகாண்டம் என மூலப்பாடல்கள் ஒரு காண்டத்திற்கு 1000 பாடல்கள் என ஏழு காண்டத்திற்கு 7 ஆயிரம் பாடல்கள் உள்ளது. இந்த பாடல்களில் உள்ள மருத்துவ குறிப்புகளை மட்டும் தொகுத்து சுருக்கமாக வடிவமைத்திருக்கிறார். இந்த நூலில் காணப்படும் மருத்துவ குறிப்புகளை வைத்து அவற்றை தயாரிக்கும்விதம், அதை உண்ணும் விதம் ஆகியவற்றை எளிய நடையில் கூறுகிறார் ஆசிரியர். நன்றி; தினத்தந்தி, 11/9/2013.