டாக்டர் மு.வ.வின் தனிப்பெரும் மாட்சி
டாக்டர் மு.வ.வின் தனிப்பெரும் மாட்சி, கவிவேந்தர் கா. வேழவேந்தன், கீதை பதிப்பகம், பக்கம் 184, விலை 100 ரூ
இலக்கியம் தோய்ந்த கவிஞராகவும், அரசியல் துறை சார்ந்த நெறியாளராகவும், நல்ல வழக்கறிஞராகவும், மானடத்தை நேசிக்கும் மாண்பாளராகவும் உலா வருகின்ற கவிவேந்தர் டாக்டர். மு.வ., எனத் துவங்கி, ‘டாக்டர் மு.வ., அவர்களும் நானும்’ என 30 கட்டுரைகளோடு நிறைவு செய்துள்ளார் வேழவேந்தன். மாண்பு என, பல கட்டுரைகளில் நூலாசிரியர் அழகாய் பதிவு செய்துள்ளார். பேராசிரியரது படைப்புகளில் செந்தாமரை, கள்ளோவியமோ, அந்த நாள், கரித்துண்டு, கயமை, அகல்விளக்கு, வாடாமலர் என தமிழறிந்த அத்துணை நல்உள்ளங்களும் போற்றிப் புகழும் புதினங்கள் பற்றி கவிஞர் எழு கட்டுரைகளில் விரிவான ஆய்வுரையை பதிவு செய்துள்ளார். வித்தியாசமான திறனாய்வு. ஐரோப்பிய நாடுகளிலும், கீழை நாடுகளிலும் வாழ்கின்ற தமிழர்கள் இல்லங்களின் வரவேற்பு அறை மேஜை மீது இன்றைக்கும் டாக்டர் மு.வ., அவர்களின் ‘திருக்குறள் தெளிவுரை’ கையடக்கப் பதிப்பு உள்ளதாம். பேராசிரியர் மு.வ., ஓர் ஆலமரம். அம்மரம் பூமியில் பதித்த ஆயிரக்கணக்கான விழுதுகள்தான், இன்றைக்கு தமிழ், பண்பாடு, நாகரிகம், கலாசாரம், மொழி, இனம் சார்ந்து நாளெல்லாம் உழைத்துக் கொண்டிருக்கின்ற தமிழ பேரறிஞர்கள் குழுமம் என்பதை மறுக்க முடியாது, மு.வ., அவர்களின் எளிமை, இனிமை, பழகுகின்ற பாங்கு, விருந்தோம்பல், தமிழ்ப்பற்று, கருத்து முதிர்ச்சி, தனி மனித ஒழுக்கம், நேர்மை, வாய்மை, விரோதியையும் நேசிக்கும் உள்ளம் ஆகியவை ஒரு தனிபெரும் சகாப்தம். அத்தகைய சகாப்தத்தைத் தொட்டுப் பார்க்க உதவும் இலக்கிய ஏணி. – குமரய்யா நன்றி: தினத்தந்தி, 26-ஆகஸ்ட்-2012