டாலர் தேசத்து அனுபவங்கள்
டாலர் தேசத்து அனுபவங்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ, இண்டஸ்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 98, விலை ரூ.100.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான ஆர். நல்லக்கண்ணு, தனது அமெரிக்க 20 நாள் சுற்றுப்பயண அனுபவத்தை வெளிப்படுத்தி உள்ளார். அங்கு வாழும் தமிழ் பற்றாளர்களின் சந்திப்பு, வரலாற்று தலங்கள், தலைவர்களின் சிலைகள், அவர்களின் சிறப்புகளையும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஏகாதிபத்திய போக்கையைம் வெளிப்படுத்த தவறவில்லை.
—-
தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில், குடவாயில் பால சுப்ரமணியன், சுவாமி தயானந்தா கல்வி அறக்கட்டளை, மஞ்சக்குடி 612610, திரூவாரூர் மாவட்டம், விலை 1000ரூ.
கும்பகோணம் அருகே, ஏறத்தாழ 870 ஆண்டுகளுக்கு முன், சோழ மன்னர் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்டு, தற்போது உலக மரபுச் சின்னங்களில் ஒன்றாகப் போற்றப்படும் தாராசுரம் ஐராவதீசுவரர் கோவிலில் நாட்கள் கணக்கில் தங்கி இருந்து அங்குள்ள சிற்பங்களை அங்குலம் அங்குலமாகப் பார்த்தாலும் அறிய முடியாத பல அற்புத அதிசய தகவல்களை, நமது கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார் ஆசிரியர். இதற்குத் துணையாக அவர் பயன்படுத்தி இருக்கும் 500க்கும் மேற்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு மிகச் சிறப்பு. சேக்கிழாரின் பெரிய புராணத்தை இரண்டாம் ராஜராஜன் கற்களால் கோபுரமாக கட்டிய சாதனை போலவே, ஆசிரியர் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து சொற்களால் உருவாக்கிய இந்த அரிய புத்தகமும் போற்த் தக்க சாதனை என்றால் மிகை இல்லை. நன்றி: தினத்தந்தி, 16/1/2014.