டால்ஸ்டாய் சிறுகதைகள்
டால்ஸ்டாய் சிறுகதைகள், டால்ஸ்டாய், ஆப்பிள் பள்ளிக் இன்டர்நேஷ்னல், (பி) லிட், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு, சென்னை 94, பக். 144, விலை 90ரூ.
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இலக்கிய நெஞ்சங்களில் பெரும் தாக்கத்தை உருவாக்கி, புதிய அதிர்வை, புதிய கோணத்திலில் கதைக்களம் உருவாக்கக் காரணமானவர் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய். அவரின் வானவில்லை ஒத்த ஏழுவிதமான புதிய கதைகளைத் தொகுத்து வந்துள்ளது இந்நூல். நகைச்சுவையையும் வாழ்வியலையும் சேர்த்துக் கட்டியுள்ள இக்கதைகள் வாசிப்பவருக்கு ருசி கூட்டி வாழ்வில் தேடலைத் தூண்டி வரம் அளிக்க வந்த கதைகள் எனலாம்.
—-
உங்கள் குழந்தைகளும் நல்ல குழந்தைகளை, குருபிரியா, ஆப்பிள் பள்ளிக் இன்டர்நேஷ்னல், (பி) லிட், 130, நெல்சன் மாணிக்கம் ரோடு, சென்னை 94, விலை 50ரூ.
நமது குழந்தைகளை மாண்புமிகு மானிடராக்குவது எப்படி? என்ற வளர்ப்பு முறைகளை விவரிக்கிறது இந்த நூல். கு ழந்தைகளை வளர்ப்பதற்கான எளிமையான வழிகளை சுவாரஸ்யமாக ஒன்பது தலைப்புகளில் விவரிக்கிறது. பெற்றோர்கள் கைவசம் இருக்க வேண்டிய இந்தக் கையேடு வீட்டு நூலகத்தில் வீற்றிருப்பது அவசியமானது. -கருப்பன். நன்றி: கல்கி, 5/1/13