ட்ரஷர் ஆப் இந்தியன் மியூசிக்,

ட்ரஷர் ஆப் இந்தியன் மியூசிக், கே.ஏ. பக்கிரிசுவாமி பாரதி, குருகலம் அகாதமி, சென்னை 78, பக். 720, விலை 440ரூ.

இசையும் பரதமும் நமது நாட்டின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடிக்கும் இருகலைகள். இவ்விரு கலைகளைப் பற்றியும் பல பயனுள்ள தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. 72 மேளகர்த்தா ராகங்கள், அவற்றின் ஸ்வரஸ்தானங்கள், 35 தாள வகைகள் பற்றிய விளக்கங்கள், கடபயாதி திட்டம், வாக்கேயகாரர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், சுமார் 130 ராகங்களின் ராக லட்சணங்கள், வாக்கேயக்காரர்களின் முத்திரைப் பட்டியல், தேவாரம், திவ்யப்பிரபந்தம் பற்றிய விளக்கங்கள், கர்நாடக, இந்துஸ்தானி இசைக் கச்சேரிகளில் இடம்பெறும் வாத்தியக் கருவிகள் பற்றிய அனைத்து விவரங்கள் என பல பயனுள்ள தகவல்களை அளிக்கும் ஒரு தகவல் களஞ்சியமாக இந்நூல் திகழ்கிறது. ராக லட்சணங்கள் பற்றி விவரித்த பின்பு, அந்த ராகத்தில் அமைந்த க்ருதிகளின் பெயர்களை அவற்றை இயற்றியவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டிருப்பது சிறப்பு. வாத்தியங்களின் படங்கள் வரையப்பட்டு பாகங்களைக் குறித்திருப்பதுடன், அவற்றுடன் மனிதனின் காது, தொண்டை ஆகியவற்றின் அமைப்பையும் விளக்கியிருப்பது புதுமையாக உள்ளது. பன்னிரண்டு வகை நடனம் பற்றியும் கிராமிய நடன வகை பற்றிய விளக்கமும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. இசை மாணவர்களுக்குப் பயன்படும்விதத்தில் ஒரு குறிப்புப் புத்தகத்தைப்போல பல விஷயங்களை உள்ளடக்கியுள்ள இந்நூல் அவர்களுக்கு மட்டுமல்லாமல், இசை ஆர்வலர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் நிச்சயம் பயன்படும். நன்றி: தினமணி, 31/12/2012.  

—-

 

கோச்சடையான், கௌதம நீலாம்பரன், குமுதம் புத்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக்.160, விலை-100ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-800-5.html

கௌதம நீலாம்பரன் குமுதத்தில் இப்புதினத்தைத் தொடராக எழுதியபோது வாசகர்கள் தந்த ஆதரவு அதிகம். பாண்டிய அரசர்களுள் ஒருவரான கோச்சடையான் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள், சாளுக்கிய அரசர் புலிகேசியின் வழிவந்த விக்ரமாதித்தன் காஞ்சி மீது படையெடுத்துவந்து, காஞ்சியைக் கைப்பற்றிய சம்பவம் ஆகியவை படிப்போருக்குப் புதிய வரலாற்றினைத் தரும். விக்கிரமாதித்தனை, தன் வீரத்தாலும் ராஜ தந்திரத்தாலும் கோச்சடையான் வென்ற வீரவரலாற்றையே கோச்சடையான் என்ற பெயரில் புதினமாக வடித்துள்ளார். அரசு ஆவணங்கள் செப்பேடுகள் தந்த ஆதாரத்தின்படி, ஆசிரியர் இந்நாவலைப் படைத்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்ட வேண்டும். நன்றி: குமுதம், 26/12/12.

Leave a Reply

Your email address will not be published.