தமிழருவி
தமிழருவி, தமிழருவி மணியன், விகடன் பிரசுரம், 757, அட்ணணாசாலை, சென்னை 2, பக். 320, விலை 115ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-838-6.html
தமிழருவி மணியனின் துணிச்சலான அரசியல் விமர்சனங்கள், இந்த நூலில் காணப்படுகின்றன. ஒரு குடும்பத்தில் தனி மனிதர் ஒருவர் தவறு செய்தால், பாதிக்கப்படுவது அந்த குடும்பத்தினர் மட்டுமே. ஆனால் அரசியலில் நுழைந்து பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் தவறு செய்தால், அதனால் பாதிக்கப்படுவது, நாடும், நாட்டு மக்களும்தான் என அரசியலில் உள்ள அழுக்கை கட்டுரைகளில் இவர் வைக்கும் வாதங்கள் ஆணித்தரமானவை. -எஸ். குரு.
—-
செவ்வியல் இலக்கியச் செழுமை, பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, பக். 128, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-522-7.html
மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்த இரா. மோகன் பழந்தமிழ் இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பதை, இந்த நூலில் உள்ள பன்னிரு கட்டுரைகள் மலம் தெரிந்து கொள்கிறோம். சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றில் உள்ள இலக்கிய செழுமையை ஆசிரியர் நன்கு எடுத்துவிளக்கியுள்ளார். குறிப்பாக, உரையாசிரியர்கள் பற்றி எழுதியுள்ள கட்டுரை, சற்றே விரிவாக எழுதப்பட்டிருக்கலாம். பயிலரங்குகளில் வாசிக்கப்பட்டுள்ள இந்த கட்டுரைகள், பங்கு பெற்றவர்களிடையே வினா விளக்கத்துடன் அரங்கேற்றப்பட்டிருக்கக்கூடும். நூல் வடிவம் பெறுதையில் அவை முழுமையாகஅடம் பெறாமல் போய்விடுகிறது. -ஜனகன். நன்றி: தினமலர், 11/3/2012. தமிழருவி, தமிழருவி மணியன், விகடன் பிரசுரம்,