தமிழ்ச் சமூக மரபுமும் மாற்றமும்
தமிழ்ச் சமூக மரபுமும் மாற்றமும், செம்மூதாய் பதிப்பகம், சென்னை, விலை 500ரூ.
தமிழ்ச் சமூகம் எத்தனையோ மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கிறது. சங்க காலத் தமிழர்களுக்கும், இன்றைய தமிழர்களுக்கும் நடை, உடை, பாவனை அனைத்திலும் எத்தனையோ மாறுதல்கள். இதுகுறித்து நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் இப்புத்தகத்தில் அடங்கியுள்ளன. அதாவது சங்க காலக் கல்வி முறை, தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல், தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல் இலக்கணம், கண்ணதாசன் பாடல்களில் சங்க இலக்கியத்தின் தாக்கம் உள்பட 142 தலைப்புகளில் தமிழறிஞர்களும், பேராசிரியர்களும் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடிய நூல். நன்றி: தினத்தந்தி, 6/8/2014.
—-
இந்திய இலக்கியச் சிற்பிகள், நெ.து. சுந்தரவடிவேலு, ந. வேலுசாமி, சாகித்ய அகாடமி, சென்னை, விலை 50ரூ.
ஒவ்வொரு மொழியிலும் சிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை சாகித்ய அகாடமி புத்தகமாக வெளியிட்டு வருகிறது. அந்த வரலாறுகள், மற்ற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படுகின்றன. காமராஜர் முதல் அமைச்சராக இருந்தபோது, கல்வி இலாகா டைரக்டராக இருந்து மதிய உணவு திட்டத்துக்கு உறுதுணையாக இருந்த நெ.து.சுந்தரவடிவேலு, கவிஞரும் எழுத்தாளருமான திருலோகசீதாராம், ஆபிரகாம் பண்டிதர், சுவாமி தயானந்த சரஸ்வதி, சோழவந்தான் அரசஞ்சண்முகனார், முருகுசுந்தரம், நாகூர் குலாம்காதிறு நாவலர் ஆகியோருடைய வாழ்க்கை வரலாற்று நூல்கள் இப்போது வெளிவந்துள்ளன. ஒவ்வொரு நூலின் விலையும் 50ரூபாய். குறைந்த விலையில் சான்றோர் வரலாறுகளை வெளியிடும் சாகித்ய அகாடமியின் பணி பாராட்டுக்கு உரியது. நன்றி: தினத்தந்தி, 6/8/2014.