தமிழ்ச் சுரபி
தமிழ்ச் சுரபி, இலக்கியப்பீடம், சென்னை, விலை 450ரூ.
அமுத சுரபியின் ஆசிரியராக இருந்த விக்கிரமன் 1948ம் ஆண்டு முதல் 1958ம் ஆண்டு வரை, 10 ஆண்டுகளில் பிரசுரித்த சிறந்த கதை, கட்டுரை, கவிதைகளைத் தொகுத்து தந்துள்ளார். தமிழ்த்தென்றல், திரு.வி.க., ரா.பி.சேதுப்பிள்ளை, கி.ஆ. பெ. விசுவநாதம், யோசி சுத்தானந்த பாரதியார், எஸ். வையாபுரிப்பிள்ளை, க.நா. சுப்பிரமணியம், தி.க.அவிநாசிலிங்கம் செட்டியார், கி.வா. ஜெகந்நாதன் உள்பட 44 பேர்களின் கட்டுரைகளும், உமாசந்திரன், குசுப்பிரியை, எம்.எஸ். கமலா, சரோஜா ராமமூர்த்தி, கரிச்சான் குஞ்சு, பெ. தூரன், பி.எஸ். ராமையா, லா.ச. ராமாமிர்தம், வேம்பு (விக்கிரமன்) உள்பட 19 பேர்களின் சிறுகதைகளும், யோகி. சுத்தானந்த பாரதியார், சோமு, குயிலன், தமிழ் ஒளி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சாண்டில்யன், சக்திக்கனல் உள்பட 19 பேர்களின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. இதை ஒரு கலைக்களஞ்சியம் என்றே சொல்லலாம். காலத்தை வென்ற கதை, கட்டுரை, கவிதைகளைப் படித்து மகிழ இது ஒரு நல்வாய்ப்பு. குறிப்பாக மறைந்த தமிழ்ச் சான்றோர்களின் கட்டுரைகள் தமிழ் அமுதமாகத் திகழ்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 20/5/2015.
—-
வாழ்வை ரசிப்போம், அமுதா பதிப்பகம், சென்னை, விலை 90ரூ.
தொழில் அதிபரும், கல்வியாளருமான அமுதா ப.பாலகிருஷ்ணன் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்கிறார். அவர் இப்போது எழுதியுள்ள நூல் வாழ்வை ரசிப்போம். 33 கட்டுரைகள் கொண்ட புத்தகம். இவை வெறும் பொழுதுபோக்குக்காக எழுதப்பட்ட கட்டுரைகள் அல்ல. கட்டுரைகளின் நவரசங்களும் கலந்துள்ளன. சொல்லவந்த கருத்துக்களை, நகைச்சுவையுடன் சொல்கிறார். எனவே, புத்தகம் படிப்பதற்கு சுவைபட அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 20/5/2015.