தமிழ்நாட்டில் காந்தி
தமிழ்நாட்டில் காந்தி, அ. ராமசாமி, விகடன் பிரசுரம், பக். 904, விலை 425ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-198-9.html தில்லையாடிக்கும் வள்ளியம்மைக்கும் என்ன தொடர்பு? 1969ல் முதல் பதிப்பாக வெளிவந்த இந்த நூல், தற்போதுதான் மறு அச்சு கண்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில், காந்தியின் இளமை காலத்தில், பாலசுந்தரம் என்ற தமிழன் முதன்முதலாக அவர் உதவியை நாடினார். அதுமுதல் தமிழருடன் அவர் கொண்ட அன்பு, இறுதிவரை தொடர்ந்தது. அதை, இந்த நூல் ஒரு குறும்படமாக நமது இதயத் திரையில் ஓட வைக்கிறது. தில்லையாடி வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி போன்றவர்களின் தியாகங்கள், இதுவரை வெளிவராத பல விவரங்கள் இந்த நூலில் உள்ளன. 1896 முதல் காந்திக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு, 1946 வரை நீடித்ததை, நாட்குறிப்புகளுடன் கதையாக சித்தரித்துள்ளார் ஆசிரியர். காந்தி வலம் வந்த தமிழக ஊர்கள், கிராமங்கள், அங்கு சந்தித்த பிரமுகர்கள், நிகழ்த்திய உரைகள் ஆகியவை, நூலின் பின்னால், ஆண்டுவாரியாக பட்டியலாக தரப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரக போராட்டத்தை பற்றி படித்தால், விழிகளில் நீரை வரவழைத்துவிடும். தில்லையாடிக்கும் வள்ளியம்மைக்கும் தொடர்பே இல்லை என்பது, இந்த நூலில் உள்ள உண்மை செய்திகளில் ஒன்று. நூலின் முதற்பதிப்பு பற்றியும், நூலாசிரியர் வரலாற்றையும் குறிப்பிட்டிருக்கலாம். தரங்கம்பாடி அருகே உள்ள தில்லையாடியையும் வள்ளியம்மாளையும் இணைத்து, இப்போது எத்தனையோ கட்டுக்கதைகள் தமிழகத்தில் பரவிவிட்டன. இவற்றில் ஒரு கதை வள்ளியம்மாள் தில்லையாடியில் பிறந்த அரிஜனப் பெண் என்றும், காந்திஜி தில்லையாடிக்கு வருவதற்குப் பல மாதங்களுக்கு முன்னமேயே வள்ளியம்மா, வீர சொர்க்கம் சேர்ந்துவிட்டாள் என்பது தெரியாது. -முன்னுரையில் அ. ராமசாமி. -முனைவர் மா.கி. ரமணன். நன்றி: தினமலர், 8/6/2014.
—-
மனமே நலமா, டாக்டர் சிவ. நம்பி, வள்ளுவர் பண்ணை, சென்னை, விலை 90ரூ.
தற்செயலாகக் காணக் கிடைத்த நூல் மனமே, நலமா? என்னை மீண்டும் மீண்டும் அந்த நூலைப் படிக்க வைத்தது. இதை எழுதிய டாக்டர் சிவ. நம்பி சென்னையில் மனநல மருத்துவராகப் பணியாற்றுகிறார். எழுதப் படிக்கத் தெரிந்த அனைத்து தமிழர்களும் பயன்பெறக்கூடிய முறையில் மனநோய், அதன் ஆரம்ப அறிகுறிகள், ஓரளவு சுயமாக அந்த நோயை எதிர்கொள்வது எப்படி ஆகிய விஷயங்கள் பற்றி எளியநடையில் ஆனால் விஞ்ஞானபூர்வமாக எழுதியிருக்கிறார். சிறிய புத்தகமானாலும் தலைப்பின் பரிமாணங்கள் பலவற்றை படிப்போருக்குத் தெரியப்படுத்துகிறது. நாம் சைக்காலஜி என்ற சொல்லை எது எதற்கோ பயன்படுத்தினாலும் மனநல மருத்துவம் சைக்கியாட்ரி இன்றைய சமூகத்தில் ஒரு நுண்ணிய, அவசியமான துறை. மூச்சு விடுதலைப் பயன்படுத்துவது பற்றி அவர் எழுதியிருக்கும் வரிகள், அவருடைய பரந்த பார்வையைக் காட்டுகிறது. நன்றி: குங்குமம், 16/6/2014.