தாய்ப்பால்
தாய்ப்பால், முகுந்தன், தமிழில் டி.க. சதாசிவம், சாகித்ய அகாதெமி குணா பில்டிங்ஸ், சென்னை, பக். 336, விலை 185ரூ.
சுனாமிபோல புறப்பட்டு வரும் மேற்கத்திய நாகரிகம், தொழில்நுட்பப் பெருக்கம், நவீனமயமாக்கல், காலனிமயமாக்கல் போன்றவற்றால் ஏற்படும் பின்விளைவுகளை நமது பண்பாட்டு விழுமியங்கள் எவ்வாறு முரண்பட்டு எதிர்கொள்கின்றன என்பதைப் பாசாங்கில்லாமல் எடுத்துச் சொல்கின்றன ‘உண்ணி சொன்ன கதை’, ‘பிளாஸ்டிக்’, ‘காரோட்டி‘, ‘பாவாடையும் பிக்கினியும்’ ஆகிய சிறுகதைகள். யதார்த்தத்தை மீறிய கற்பனைக்கு எட்டாத உலகத்தை சுவாரசியமாகவும் தத்துவார்த்தமாகவும் சொல்கின்றன. ‘தணியாத தாகம்’, ‘குளியலறை’ ஆகிய சிறுகதைகள். ‘மாதவனின் பயணங்கள்’, ‘புதிய புதிய முகங்கள்’ ஆகியவை செயற்கையான பகுப்பாய்வு செய்யாமலும் இட்டுக்கட்டியும் எழுதாமல வரலாற்றின் சிறுசிறு பகுதிகளை உள்ளது உள்ளவாறே உரைக்கின்றன. ‘அலுவலகம்’, ‘தாய்ப்பால்’, ‘வேசிகளே உங்களுக்கோர் ஆலயம்’, ‘ஐந்தரை வயதுள்ள குந்தை’ போன்றவை நடப்புண்மைகளையும் சமூகத்தின் மீதான அக்கறையையும் காட்டுவதால் குறிப்பிடத்தக்க சிறுகதைகளாகின்றன. கருப்பொருளின் தேவையுணர்ந்து செய்யப்பட்ட தெளிவான மொழிபெயர்ப்பு வாசிப்பை இனிதாக்குகிறது. நன்றி: தினமணி, 16/3/2015.