தாய்மை
தாய்மை, பத்மா பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-368-1.html பேறு கால பராமரிப்பும், குழந்தை வளர்ப்பும் குறித்து டாக்டரும், பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான வெ. குழந்தைவேலு எழுதிய நூல். கருவுற்ற காலம் தொடங்கி, குழந்தை பிறக்கும் வரை பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய அரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். கருவுற்ற நாளில் இருந்து அடிக்கடி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். கண்ட கண்ட மாத்திரைகளை சாப்பிடக்கூடாது என்பன போன்ற நலம் பயக்கும் அறிவுரைகள். இதைத் தொடர்ந்து குழந்தையை வளர்க்கும் முறை, தாய் மற்றும் குழந்தைக்கான உணவு, நோய் தடுப்பு முறை போன்ற பயனுள்ள கருத்துகளையும் இந்த நூலில் டாக்டர் விரிவாகக் கூறியுள்ளார். தாய்மார்களுக்கு பெரிதும் பயன்படும் இந்த நூலை இன்னும் சற்று தரமான தாளில் அச்சிட்டிருக்கலாம். நன்றி: தினத்தந்தி, 28/5/2014.
—-
நம்பிக்கை வெளிச்சம், விக்னேஷ் பதிப்பகம், 39, ஜீவா நகர், எமனேஸ்வரம், பரமக்குடி, விலை 80ரூ.
அரசியல், இலக்கியம், கல்வி, பொருளாதாரம், தொழில், நாட்டுநடப்பு அனைத்திலும் கவனம் செலுத்தப்பட்ட 25 விழிப்புணர்வு கட்டுரைகளின் தொகுப்பு நூல். நாட்டில் என்ன கொடுமை நடந்தாலும் எத்தனை அவலங்கள் நடந்தாலும் இந்நாட்டு மக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு வாழாவிருக்கிறார்கள் என்று ஆதங்கப்படுகிறார் நூலாசிரியர் என்.எஸ். பெருமாள். மவுனப்புரட்சி செய்கிறது இப்படைப்பு. நன்றி: தினத்தந்தி, 28/5/2014.