திரைப்படத் தகவல்களின் வினாடி-வினா விடை
திரைப்படத் தகவல்களின் வினாடி-வினா விடை, டி.என். இமாஜான், சங்கர் பதிப்பகம், சென்னை 49, பக். 160, விலை 60ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-577-5.html
வினாடி வினா வடிவத்தில் திரைப்படத்துறை சார்ந்த தகவல்களைச் சொல்லும் புத்தகம். இந்தப் புத்தகத்தில் உலக சினிமாவில் இருந்து உள்ளூர் சினிமா வரை அனைத்து முக்கியமான திரைப்படங்களைப் பற்றிய தகவல்கள் திறம்படத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் நடிக்க வந்த வருடம், அவர்கள் பெற்ற விருதுகள், மிக முக்கியமான படங்கள், அதனை இயக்கிய இயக்குநர்கள், உலக அளவில் சினிமா சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் விருது பற்றிய தகவல்கள், இந்தியாவில்வழங்கப்படும் திரைத்துறையின் முக்கிய விருதுகள், குறிப்பாக நம்முடைய மனம் கவர்ந்த நட்சத்திரங்களின் நிஜமான பெயர்கள் என ஒரே மூச்சில் படித்துவிடும்படி புத்தகம் சுவாரஸ்யமாக அமைந்திருப்பது சிறப்பு. நன்றி: தினமணி
—-
சுந்தர மூர்த்தி நாயனார், கவுதம் பதிப்பகம், 2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை 50, விலை 50ரூ.
சைவ சமய குரவர்களில் நால்வரில் ஒருவரான சுந்தர மூர்த்தி நாயனாரின் வாழ்க்கை வரலாற்றை கவிதை நடையில் கூறும் புத்தகம். சுந்தரின் இளமை பருவம், சிவபெருமான் ஆட்கொண்டது, பாவையார், சங்கிலியாருடன் திருமணம், செங்கற்களை பொன்னாக்குதல் போன்ற நிகழ்ச்சிகளை பாமரரும் புரிந்து கொள்ளும்விதத்தில் கவிதையாக வடித்துள்ளார் ஆசிரியர் முத்துராமலிங்கம். நன்றி; தினத்தந்தி, 4/4/2012.