திறனாய்வுத் திலகம் சிலம்பொலி செல்லப்பன்
திறனாய்வுத் திலகம் சிலம்பொலி செல்லப்பன், சீ.பிரமிளா, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, பக். 192, விலை 100ரூ.
தமிழ்க் கவிதைத் திறனாய்வில் சிலம்பொலி செல்லப்பனாரின் பங்களிப்பு என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடாகி தற்போது நூலாகியிருக்கிறது. பிற மொழி இலக்கியத் திறனாய்வுகளை விடத் தமிழ் இலக்கியத் திறனாய்வு மிகவும் தொன்மை வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட காலமாகவே தமிழ் இலக்கியத் திறனாய்வாளர்கள் பலர் இருந்திருக்கின்றனர். அந்த வரிசையில், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், கவிதை நூல்கள் எனப் பலவற்றுக்கும் திறனாய்வுகளை மேற்கொண்டவர் சு. செல்லப்பன். சங்க இலக்கியத் திறனாய்வு, சிலப்பதிகாரத் திறனாய்வு, காப்பியத்திறனாய்வு, கவிதைநூல்களுக்கு வழங்கிய அணிந்துரைக் கவிதைத் திறனாய்வு, திறனாய்வாளர்களில் செல்லப்பனார் பெறுமிடம் ஆகிய ஐந்து தலைப்புகளில் ஐந்து இயல்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கியத் திறனாய்வாளர் வரிசையில் சு. செல்லப்பன் பெறும் சிறப்பிடத்தையும், தமிழ்க் கவிதைத் திறனாய்வில் அவரது பங்களிப்பையும் ஆராய்ந்துள்ளது இந்நூல். நன்றி: தினமணி, 2/11/2015.