துணை வேந்தர் சொல்லும் செயலும்
துணை வேந்தர் சொல்லும் செயலும், மு. பொன்னவைக்கோ, தமிழ்ப்பேராயம், எஸ்.ஆர்.எம், பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் 603203.
பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பணிபுரிந்துள்ள பொன்னவைக்கோ, தமிழறிஞர்களுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பைப் பெற்ற பொறியாளர். தமிழ் மொழியைக் கடந்து, பிறமொழிகள் மீது பற்றும் பாசமும் உள்ள ஒரு பரந்துப்பட்ட, விசாலமான பார்வையாளர். பெரியாரின் கொள்கைகளை வரவேற்கும் இவர், ஆன்மிகத்திலும் நாட்டம் உள்ளவராக இருக்கிறார். சொந்த வாழ்க்கை பற்றி சில தகவல்கள், பணிபுரிந்தபோது பெற்ற அனுபவங்கள், செய்து முடித்த சில சாதனைகள், சில சொற்பொழிவுகள் என பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய இந்த நூல் ஒரு பலசுவை விருந்து. இவரைப் போன்ற சிந்தனைவாதிகள் தமிழ்நாட்டுக்கு பொக்கிஷம் என்று சொல்ல வைக்கிறது, இந்த புத்தகம். -ஜனகன். நன்றி: தினமலர், 25/12/2011
—-
ஜகத்குரு ஸ்ரீமத்வாச்சார்யார், டி.கே.சுரேந்திரன், ஸ்ரீராக வேந்திர நிவாஸ், 34, மகால் 5வது தெரு, மதுரை 625001, விலை-குருகாணிக்கையாக ரூ.100, கூரியர் மூலம் 120ரூ.
ஸ்ரீமத்வரின் வரலாறு, சித்தாந்தம் மற்றும் மகிமைகள் சிறப்பாக விளக்கப்பட்டிருக்கின்றன. சௌராஷ்டிரர் மாத்வரான ஆசிரியர். எழுதிய விளக்கங்கள் மத்வரை தமிழகத்திற்கு அதிகம் புரியவைக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினமலர், 25/12/2011
—-
பர்ஸ்ட் அட்வென்சர், தி செவன்த் அவதார், தி ரேஸ், தி பீஸ்ட், பிரண்ட்ஸ், (ஒவ்வொன்றும் 24 பக்கம், விலை-தலா 60ரூபாய்), கிரி டிரேடிட் பி. லிட், 134, டிஎஸ்வி.கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை 600004.
இவை அனைத்தும் சிறுவர்களுக்கான நல்ல நூல்கள். ஆங்கிலத்தில் கார்ட்டூன், படத்துடன் வண்ணத்தில் வெளிவந்திருக்கிறது. நன்றி: தினமலர், 25/12/2011