சைவமும் தமிழும்
சைவமும் தமிழும், முனைவர் ரா. செல்வகணபதி, ஓம் நமச்சிவாய பிராத்தனைக் கோபுரம், பள்ளிக்கரணை, சென்னை 100, விலை 60ரூ.
சைவ சமயத்தின் உயர்வையும், தமிழ் மொழியின் சிறப்பையும் நன்கு எடுத்துக்காட்டும் வகையிலும், அதே நேரம் மற்ற சமயங்களிலும் மொழிகளிலும் காணப்படாத அளவிற்கு, பல்வகை சிறப்புகளை சைவ சமயமும், தமிழ் மொழியும் பெற்றிருப்பதையும், அந்த சிறப்புகளின் அருமையையும், முனைவர் ரா.செல்வகணபதி எளிய, இனிய நடையில் உருவாக்கித் தந்திருக்கிறார். இதில் எக்காலத்திலும் பொலிவு குறையாத தமிழ் மொழியின் சிறப்புகளையும் என்றும் உயர்வளிக்கும் சைவ சமயத்தின் அளப்பிலா உயர்வுகளையும், நம் நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழர்கள் அறிந்து, பயன்பெறும் வகையில் படைத்துள்ளார். பக்தி இலக்கியங்களை ஒளியூட்டி வெளிக் கொணர்வதும் தமிழ் மொழிக்கு செய்யும் அரிய தொண்டுதான். -ஸ்ரீநிவாஸ் பிரபு. நன்றி: தினமலர், 25/12/2011
—-
ஸ்ரீதேவி மஹாத்மியம் ஸ்ரீதுர்கா ஸப்தச தீ, தொகுப்பாசிரியர்-டாக்டர் பா.ராமசந்தரசேகர், கிரி டிரேடிங் ஏஜென்சி பிரைவேட் லிமிடேட், 134 (58/2) டி.எஸ்.வி.கோவில் தெரு, மயிலாப்பூர், சென்னை 4, பக். 560, விலை 195ரூ.
தேவியைத் துதிக்கும் பல முறைகளில் துர்கா ஸப்தச் தீ பாராயணம் மிக முக்கியமானது. அம்பாளின் காருண்யத்தைக் கூறும் கதைகளும், அவளை கண்டிகையாக வர்ணிக்கும் ஸ்லோகங்களும் அடங்கியது ஸப்தச் தீ. இந்நூல் முழுவதும் மந்திரமாக உள்ளது. முதல் அத்யாயத்தில் ப்ரஜ்ம ஸ்துதி, நான்காம் அத்யாயத்தில் இந்திர ஸ்துதி, ஐந்தாம் அத்யாயத்தில் நாராயண ஸ்துதி ஆகியவற்றை மட்டும், எல்லாரும் பாராயணம் செய்யலாம். -மயிலை சிவா. நன்றி: தினமலர், 25/12/2011