மெழுகுவர்த்திகள்
மெழுகுவர்த்திகள், எ.எஸ்.யைர், பிரேமா பதிப்பகம், 58/1, ஆழ்வார்ப்பேட்டை தெரு, சென்னை 18, விலை 40ரூ.
தன்னை அழித்துக்கொண்டு, தான் உருகி உலகத்திற்கு ஒளி வெள்ளத்தை தருவது மெழுகுவர்த்தி. அதன் தியாகத்திற்கு இணையாய் வாழ்ந்து, இந்த சமுதாயத்தின் மடமை இருளை விரட்ட தங்கள் தியாகச் செயல்களால் புது வெளிச்சம் பாய்ச்சியவர்கள் பற்றிய குறிப்புகளே மெழுகுவர்த்திகள் எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. சில தியாக மெழுகுவர்த்திகளான காந்தி, நேரு, காமராஜர், தெரசா, விவேகானந்தர், இந்திரா, ராஜிவ், ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வாழ்வியல் சம்பவங்கள் சுவாரஸ்யம் ததும்ப தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினமலர், 25/12/2011.
—-
ஆன்மிகச் சுற்றுலா வழித்துணைவன், மேவானி கோபாலன், நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை 17, பக். 400, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-707-8.html
இந்நூலில் 225 விசேஷ ஸ்தலங்களின் விவரங்கள், திருப்பரங்குன்றம், சுசீந்திரம், தனுஷ்கோடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற திருத்தலங்கள், கோவிலைச்சுற்றி வரும்போது, ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒருமுறை உள்ளது. உதாரணத்திற்கு பிள்ளையாரை ஒரு முறை சுற்றிவந்தாலே போதும். அம்மனை தரிசிக்கும்போது நான்கு முறை சுற்றி வர வேண்டும். அரச மரத்தை ஏழுமுறை சுற்ற வேண்டும். அதைப்போல் நவக்கிரகங்களை ஒன்பது முறை சுற்ற வேண்டும் என்பது போன்ற குறிப்புகளையும் தருகிறார். வேளாங்கண்ணி கோவில், வில்லியனூர் மாதா கோவில், சாந்தோம் பேராலயம் என்றெல்லாம் விவரங்கள் தரப்பட்டுள்ளன. -எஸ்.குரு. நன்றி: தினமலர், 25/12/2011