தூக்குமர நிழலில்
தூக்குமர நிழலில், சி.ஐ. மலன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 120ரூ.
மரண தண்டனைணை எதிர்கொண்ட நெஞ்சுரம் மிக்க போராளியின் மனநிலையை பதிவாக்கியிருக்கும் வரலாற்று ஆவணம். கொலைக்குற்றவாளியாக 12 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலே இருந்தபோதுதான் வாழ்வின் ஒளியமயமான பொன்மயமான வாழ்வின் வசந்த காலம் அனைத்தும் சி.ஏ. பாலனிடமிருந்து பிரிந்து சென்றது. வேதனை நிறைந்த உடலோடும், மனதில் குமுறியெழுந்த போராட்டங்களோடும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டதிலிருந்து தூக்குமேடைக்கு செல்வது வரையிலான அவஸ்தையை, பாலன் உருக்கம் பெருக சொல்லியிருக்கும் பக்கங்களை எந்தவொரு வாசகரும் எளிதில் கடந்து விட இயலாது. மரண தண்டனையின் கொடூர முகத்தைக் காட்டும் கண்ணாடி இந்த நூல். நன்றி: தினத்தந்தி, 13/1/2016.