நபிகள் நாயகம்
நபிகள் நாயகம், குலாம் ரசூல், காஜியார் புக் டிப்போ, தஞ்சாவூர், பக். 420, விலை 120ரூ.
அண்ணல் முஹம்மத் நபி சரிதையை புதிய பாணியில் கூறும் நூல். நபி அவர்களைப் பற்றி தமிழில் பல நூல்கள் வந்திருந்தாலும், அவரைப் பற்றிய சரித்திர சம்பவங்கள், நிகழ்வுகள், அவற்றிற்கு ஆதாரமான நூல்களைக் குறிப்பிட்டு இச்சரிதத்தை உருவாக்கி இருப்பதால் கவனத்திற்குரிய நூலாகிறது. முஸ்லிம் சமூகத்தார்மட்டுமல்லாது, பிற சமூக அன்பர்களும் படித்துப் பயனடையும் வகையில் படைத்திருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 30/4/2014.
—-
அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள், மணற்கேணி பதிப்பகம், சென்னை, பக். 116, விலை 95ரூ.
தலித் மக்களின் வாழ்வுரிமைக்கான நீண்ட நெடிய போராட்டத்தில் நீதியரசர் சந்துரு வழங்கிய தீர்ப்புகளின் பதிவு இந்நூல். அத்தனையும் டாக்டர் அம்பேத்கர் தந்த ஒளியில் தரப்பட்ட தீர்ப்புகளின் தொகுப்பாக பதிவாகியுள்ளது. பஞ்சமி நிலத்திற்காக, கல்லறை சமத்துவத்திற்காக, கழிப்பறைக்காக, சாதி மறுப்பு திருமணங்கள், பாலியல் வன்கொடுமை, தீண்டாமைச் சுவர் தகர்ப்பு, கோயில்களில் வழிபாட்டு உரிமை, தலித்களின் வாழ்வுரிமை என்று நீதியரசர் சந்துரு வழங்கிய தீர்ப்புகளின் சட்ட சரித்திரம் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. தீர்ப்பில் அவர் அளிக்கும் மேற்கோள்களும் தகவல்களும் ஆதாரங்களும் வியக்க வைக்கின்றன. சந்துருவின் படிப்பாற்றலை நிரூபிக்கின்றன. தீர்ப்புகள் அனைத்தும ஆங்கிலத்தில் உள்ளன. தமிழிலும் தந்தால் இன்னும் நூலின் பயன் கூடும். நன்றி: குமுதம், 30/4/2014.