நம் நாயகம்
நம் நாயகம், ஜெஸிலா பானு, அல்லாப் பிச்சை ராவுத்தர் அறக்கட்டளை, திருவாரூர் மாவட்டம், விலை 300ரூ.
இறுதி இறைத் தூதராய் இந்த அவனியில் அவதரித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அகில உலகத்திற்கே ஓர் அழகிய முன் மாதிரி. அவர்கள் வாழ்வில் நடந்த அற்புதமான சம்பவங்களை 63 தலைப்புகளில் எழுத்தாளர் ஜெஸிலா பானு இந்த நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். நபிகளாரின் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் மனித சமுதாயம் பின்பற்றி நடக்க வேண்டிய போதனைகளாகும். அதே குழந்தைகளுக்காக அவர்கள் மொழியிலேயே சின்ன சின்ன கதைகளாக வடித்துத் தந்திருப்பது பாராட்டுக்குரியது. இதனால்தான் இந்த நூலைச் சிறாருக்கான சீறா என்று கவிக்கோ அப்துல் ரகுமான் வாழ்த்துரையில் வர்ணித்துள்ளார். நூலின் அமைப்பும், வண்ணப்படங்களும் புத்தகத்திற்கு மேலும் பொலிவைத் தருகிறது. நன்றி: தினத்தந்தி.
—-
திரைக்களஞ்சியம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.
1951ம் ஆண்டு முதல் 1960 வரை வெளிவந்த திரைப்படங்கள், பாடல்கள், கவிஞர்கள், இசை அமைப்பாளர்கள், பாடகர்கள் பற்றிய விவரங்கள் கொண்ட புத்தகம். ஆசிரியர் கோ. நீலமேகம் சிரமப்பட்டு தகவல்களை சேகரித்துள்ளார். நன்றி: தினத்தந்தி.