நான் வந்த பாதை
நான் வந்த பாதை, எஸ்.எஸ். ராஜேந்திரன், அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 500ரூ.
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் சுயசரிதம் இந்நூல். தமிழக வரலாற்றில் ஒரு நூற்றாண்டு கலை, அரசியலைப் புரிந்து கொள்வதற்கு, அவரது வாழ்வியல் அனுபவங்களுடன் சொல்லப்படும் இந்நூல் உதவக்கூடும். அவரது இளம்பிராயம், அவர் பிறந்த ஊர், படித்த பள்ளி, நாடக ஆர்வத்தைத் தூண்டிய ஆசிரியர்கள், நாடகம் பயின்ற மதுரை பாய்ஸ் கம்பெனி, அவரது அரசியல் பயணம் என்று எல்லாவற்றையும் படிப்பவர் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். பெரியார், அண்ணா, என்.எஸ்.கே., எம்.ஆர்.ராதா, கருணாநிதி போன்றோருடனான பதிவுகளில் உண்மைத் தன்மையை மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறார். சின்மா துறையில் அவர் நடித்த படங்கள், அவரோடு நடித்த நடிகர் நடிகைகள், சினிமா கலைஞர்கள், அரிய புகைப்படங்கள் என்று நம்மை எஸ்.எஸ்.ஆர். காலத்திற்கே அழைத்துச் செல்லும் நூல். உலகத்திலேயே முதன் முதலில் ஒரு நடிகர் தேர்தலில் நின்று போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்னிர் ஆனார் என்ற பெருமை எஸ்.எஸ்.ஆர்க்கு உண்டு. நன்றி: குமுதம், 8/12/2014.
—-
செய்யப்பட்டாட்டு வினை, வைகறை பதிப்பகம், திண்டுக்கல், பக். 80, விலை 45ரூ.
கொலப்படுவது / இயற்கை என்றாலும் புதைக்கப்படுவது நாம்தான் என்ற உணர்வே கவிஞரின் எண்ணத்தை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகிறது. பாதித்த நிகழ்வுகள், சிந்தனைகள், அனுபவங்களை சுருக்கமாக மனிதர்களையும் மனிதத்தையும் கவிதையாக உருமாற்றித் தந்துள்ளார். செய்யப்பாட்டு வினை படிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் சிரமமில்லாத கவிதைத் தொகுப்பு.
நன்றி: குமுதம், 8/12/2014.