நாரதரின் பக்தி நெறி
நாரதரின் பக்தி நெறி, மும்பை ராமகிருஷ்ணன், பகவன் நாமா பப்ளிகேஷன்ஸ், பக். 256, விலை 100ரூ.
நாரதர் என்ற பெயருக்கு, மனிதர்களின் அஞ்ஞானத்தை போக்கி, ஞானம், ஆனந்தம் அளிப்பவர் என்பது பொருள். பிரம்மாவின் மானச புத்திரரான நாரதர் எழுதிய பக்தி சூத்திரத்தை இந்த நூல் விளக்குகிறது. இதில் 84 நாரத பக்தி சூத்திரங்கள் விளக்கப்படுகின்றன. முதல் 24 சூத்திரங்கள் பக்தியின் நிலையைக் கூறுகின்றன. மற்றவை அதன் விளக்கம் கூறுகின்றன. சூத்திரங்களை விளக்கும்போது, பகவத்கீதை, அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதி, திருப்புகழ், திருமூலரின் திருமந்திரம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, அபிராமி அந்தாதி ஆகிய நூல்களிலிருந்து மேற்கோள்கள் காண்பித்து விளக்குவதை, நூலாசிரியரின் நுண்மாண் நுழைபுலத்திற்கு சான்று. பல பெரியோர்களின் அற்புத நிகழ்ச்சிகளையும் இந்த நூலில், நூலில் படித்து மகிழலாம். -கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 04/01/2015.
—-
மண் பயனுற வேண்டும், முனைவர் சக்குபாய், சிப்பி புக்ஸ், சென்னை, விலை 70ரூ.
சமூக ஆர்வத்துடன் மக்கள் பயனுறுவதற்காக பல்வேறு தலைப்புகளில் சிறந்த வாழ்வியல் கட்டுரைகளைப் படைத்திருக்கிறார் முனைவர் சக்குபாய். நன்றி: தினத்தந்தி, 24/12/2014.