நினைவில் நின்றவை

நினைவில் நின்றவை, டி.வி. சந்திரசேகரன், பாரதி புத்தகாலயம், சென்னை, பக். 263, விலை 180ரூ.

வங்கிகளில் வளர்ந்த தொழிற்சங்கங்கள் பற்றிய ஓர் கண்ணோட்டம் இந்நூல். காலந்தோறும் தொழிற்சங்க இயக்கங்கள் பல மாற்றங்களுக்கு உள்ளாவது இயல்பு. ஆனால் அந்த மாற்றங்கள் தொழிலாளர்களின் முன்னேற்றத்தில் நிலையான மகிழ்ச்சியைத் தந்தனவா என்பது கேள்விக்குறியே. இந்தப் பின்னணியில் நின்று, தமது 33 ஆண்டுகால தொழிற்சங்க இயக்கத்தின் ஈடுபாட்டு அனுபவத்தை, தன்னுணர்வு தலைதூக்காது, நடுநிலையோடு எழுதியுள்ளார் நூலாசிரியர். தொழிற்சங்க இயக்கத்தின் வரலாற்றை ஸ்டேட் வங்கி இயக்கத்தின் வரலாற்றோடு பகிர்ந்தளிப்பது சிறப்பு. ஸ்டேட் வங்கி தொழிற்சங்கங்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகள் இன்றைய தலைமுறைக்கு உதவக்கூடும். தொழிற்சங்க இயக்கத்தின் போராட்ட செயற்பாடுகள் பல பதிவாகியுள்ளது – பலருக்கும் பயன்தரும். மொத்தத்தில் தொழிற்சங்க வளர்ச்சிக்கு ஊழியர்களைப் பயணப்படுத்தும் ஓர் அனுபவ ஆய்வாக இந்நூல் அமைந்துள்ளது. நன்றி: குமுதம், 17/8/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *