நிம்மதி எங்கே?
நிம்மதி எங்கே?, மா. பொன்னுசாமி, பண்மா பதிப்பகம், 21ஜி/3, அப்பாவு நகர், சூரமங்கலம், சேலம் 636005, பக். 230, விலை 200ரூ.
மண்ணில் பிறந்த அனைவருக்கும், நிம்மதி என்பது தேவை. நிம்மதியை விலை கொடுத்து வாங்க முடியுமா? முடியாது. நிம்மதியை இரண்டு வழிகளில் பெற முடியும். முதலாவதாக, நல்லதைச் செய்ய வேண்டும் என்ற கட்டுக்கோப்பாய் நிம்மதி பெற முடியும். நிம்மதி என்பது, நம் உள்ளத்திலேயே இருந்தாலும், அதை வெளிக்கொணர்ந்து, அனுபவக்க முடியாத நிலையில்தான், இன்றைய மனித வாழ்க்கை இருக்கிறது. மிகவும் ஆழத்தில் நமது உள்ளத்தில் பதிந்து கிடக்கும் நிம்மதியை எட்டிப் பிடிக்க, அதன் மீது படிந்திருக்கும் தவிர்க்கப்பட வேண்டிய கெட்ட குணங்களை அகற்றினால்தான், நிம்மதியைப் பெற முடியும் என்ற உண்மையை இந்நூல் தெளிவாக விளக்குகிறது. சுயமுன்னேற்றத்துக்கு உதவும் நல்ல நூல். -எஸ். குரு.
—-
பசுமைப் புரட்சியின் கதை, சங்கீதா ஸ்ரீராம், காலச்சுவடு பதிப்பகம், பக். 254, விலை 200ரூ To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-809-1.html
இந்திய வரலாற்றில் வேளாண்துறையில் மிகுந்து பாராட்டிப் பேசப்பட்டது, பசுமைப்புரட்சி, உலகமே கண்டு வியந்த கனவுகளில், ஒன்றாக வர்ணிக்கப்படும் பசுமைப் புரட்சியின் நோக்கங்களையும், தாக்கங்களையும், இந்நூல் கேள்விக்கு உட்படுத்தி ஆசிரியரது நோக்கிற்கு எது சரி எனப்பட்டதோ அதை எழுத்துச் சுதந்திரத்தோடு பதிவு செய்துள்ளார். பசுமைப் புரட்சியின் நாயகர் என முன்னாள் அரசின் உணவு அமைச்சராக இருந்த, சி. சுப்பிரமணியம் பாராட்டப் பெற்றார். அத்தகையப் பசுமைப் புரட்சியின் வரலாற்றின் சாதக, பாதகங்களையும் சற்று கடுமையாகவே இந்நூலில் சாடியுள்ளார் நூலாசிரியர். விமர்சனங்கள் நிராகரிக்கப்படுவன அல்ல, அந்த வகையில் வேளாண்துறை சார்ந்த ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இந்நூல் துணை செய்யலாம். -குமரய்யா. நன்றி: தினமலர், 30/6/13.