பலி கடாக்கள்
பலி கடாக்கள், அகில இந்திய மில்லி கவுன்சில், சென்னை, விலை 300ரூ.
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் நம் நாட்டின் உளவுத்துறை, காவல்துறை ஆகியவை என்ன செய்து கெண்டிருக்கின்றன என்பதை விளக்கிடும் நூல். அரசு தான் செய்யும் அத்தனை அத்துமீறல்களையும் நியாயப்படுத்திட தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்கின்றது. இன்னும் ஒருபடி மேலேபோய் சட்டங்களை இயற்றிட தேவையான தீவிரவாத செயல்களை அரசே ஏற்பாடு செய்கின்றது. இதுபற்றிய பல்வேறு அறிக்கைகள், ஆவணங்கள், செய்தி அறிக்கைகள் ஆகியவற்றின் தொகுப்பு இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சட்டத்திற்கு புறம்பான கைதுகள், சித்திரவதைகள், திரிக்கப்படும் சாட்சியங்கள், போலியாக தயாரிக்கப்படும் ஆதாரங்கள், என்கவுண்டர், எதிர்தாக்குதல் இவற்றையும் விரித்துரைக்கின்றது. Scape Goats என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்நூல். நன்றி: தினத்தந்தி, 23/4/2014.
—-
நபிகள் நாயகம் வரலாறு, குலாம் ரசூல், காஜியார் புக் டிப்போ, தஞ்சாவூர், விலை 120ரூ.
அகிலங்களுக்கு ஓர் அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் நூல். நபிகளாரின் வரலாறு குறித்து பல்வேறு நூல்கள் இருந்தபோதிலும் அண்ணலாரின் வாழ்க்கைச் சம்பவங்களை தனித்தனியாகப் பிரத்து, அதற்கு ஆதாரமான நூற்களின் பெயர்களையும் குறிப்பிட்டு உருவாக்கி இருப்பது பாராட்டுக்குரியது. நபிகளாரின் வரலாற்றை அனைத்துத் தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர் குலாம் ரசூல் எளிய முறையில் எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 23/4/2014.