பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள்
பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள், கற்பகம் புத்தகாலயம், விலை 65ரூ.
மனிதனின் தொழில் முன்னேற்றத்திற்கு சூத்திரம் இருப்பதுபோல, அவன் உண்ணும் உணவிற்கும் உண்டு. உடற்கூறுகளில் ஏதாவது மாறுதல்கள் ஏற்பட்டால் அதற்குத் தகுந்தாற்போல் உணவு முறை சூத்திரத்தை மாற்றி அமைத்து உடலின் இயக்கத்தை சீர் செய்யலாம் என்பதை விளக்குகிறது இந்த நூல். வயிற்றுப்புண், குடல் புண், மலச்சிக்கல், அஜீரணம், ரத்தக் கொதிப்பு, சிறுநிரகக் கற்கள், பித்தப்பைக் கற்கள், மூலநோய், நிரழிவு, மாதவிடாய்க் கோளாறு என அனைத்து முக்கியமான நோய்களுக்கான உணவு ஆலோசனைகளை எளிய நடையில் சமையல் குறிப்பு மற்றும் பல அத்தியாவசியக் குறிப்புகளுடன் உடல் நலனை பேணுகின்ற நூலாக படைத்துள்ளார் உணவு ஆலோசகர் யசோதரை கருணாகரன். நன்றி: தினத்தந்தி, 12/2/2016.
—-
இராமகாவியம், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 82ரூ.
ராமாயணத்தை எழில்கொஞ்சும் நடையில் எழுதியுள்ளார் திருமுருக கிருபானந்த வாரியார். எல்லோரும் படித்து ரசிக்கும்படி அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 12/2/2016.