பாரதி ஒரு திருப்புமுனை

பாரதி ஒரு திருப்புமுனை, அ. அறிவுநம்பி, சித்திரம் வெளியீடு, 15, கலைவாணி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி 605008, பக். 132, விலை 75ரூ.

மகாகவி பாரதியின் கலைச் சிந்தனைகளை ஆய்வு செய்யும் நூல். பாரதி ஒரு திருப்புமுனை, பாரதியின் கலைச் சிந்தனைகள், புனை கதை உத்திகள், பாரதியும் பிற நாட்டவரும் என்பன உள்ளிட்ட 10 தலைப்புகளில் புதுமையான ஆய்வுக் கட்டுரைகளை வடித்துள்ளார் நூலாசிரியர். உலகம் முழுமைக்கும் கவிதை பாடிய பாரதியை ஆங்கிலக் கவிஞர்கள் ஷெல்லியுடனும் கீட்ஸுடனும் ஒப்பாய்வு செய்திருப்பது சிறப்பு. தீக்குள் விரலை வைத்தால்… நந்தலாலா… உன்னைத் தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா என்ற வரிகள், நிறையபின் வெளிப்பாடே என்ற ஆசிரியரின் ஆய்வு ரசிக்கும்படியிருக்கிறது. பாரதிக்கு இசைக் கலையின் மீதிருந்த புலமையும், ஆர்வமும் பாரதியின் கலைச் சிந்தனைகள் என்ற தலைப்பிலான கட்டுரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. காவியம், தனிப்பாடல், சுயசரிதை, வசன கவிதை, கதை, நெடுங்கதை, நாடகம், அங்கதக் கட்டுரை போன்றவற்றைப் படைத்த பாரதி, கும்மிப்பாட்டு, நலுங்குப்பாட்டு, அம்மானைப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு போன்ற நாட்டுப்புறப் பாடல்கலைகளிலும், ஹிந்துஸ்தானி, மேற்கத்திய இசை போன்றவற்றிலும் கூட ஞானம் பெற்றவர் என்பதை ஆதாரங்களுடன் விளக்குகிறார் நூலாசிரியர். பராசக்தி, மாகாளி, முருகன், கண்ணன் என ஹிந்து தெய்வங்களைப் பாடிய பாரதி, ஏசு கிறிஸ்து, அல்லாவையும் சேர்த்து பாடிவிட்டு இறுதியில் அறிவே தெய்வம் என்று பாடுவது முரணாக உள்ளதே என்று கேட்பவர்களுக்காக எழுதப்பட்டள்ள பாரதியார் குழப்பவாதியா என்ற தலைப்பிலான இறுதிக் கட்டுரைக்கு கூடுதல் அழுத்தம் கொடுத்திருக்கலாம். நன்றி: தினமணி, 18/11/13.  

—-

 

சோம்பலை உடைத்தெறிந்தால் சொர்க்கம்தான், கே. சொக்கலிங்கம், மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை 17, விலை 45ரூ.

55 கவிதைகள் அடங்கிய நூல். நன்றி: தினத்தந்தி, 4/12/13.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *