பாரம்பரிய அறிவியல்

பாரம்பரிய அறிவியல், ஜெ. ஜெயகிருஷ்ணன், புதிய வாழ்வியல் பதிப்பகம், சென்னை, பக். 80, விலை 80ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-202-2.html

நம் உடல் உறுப்புகள் செயல்படும் முறை பற்றியும், அவற்றை பராமரிக்கும் முறை பற்றியும் சித்தர்கள் வழிநின்று நமக்கு உணர்த்துகிறார் இந்நூலாசிரியர். முடி கொட்டுவதைத் தடுப்பதில் இருந்து, மன அழுத்தத்தைப் போக்கும் பாத பூஜை வரை நம் பாரம்பரிய அறிவியலைப் பின்பற்றினால் பல நோய்களை வராமல் தடுக்க முடியும். நோய் வந்தாலும் அதை முற்றவிடாமல் காக்க முடியும் என்பதை விளக்கிச் சொல்லும் இடங்கள் சிறப்பு. நன்றி: குமுதம், 9/4/2014.  

—-

எமது மொழிபெயர் உலகினுள், தொகுப்பு பேரா. செல்வகனகநாயகம், தமிழ் இலக்கியத் தோட்டம், கனடா, பக். 270, விலை 24 டாலர்.

கனடாவிலுள்ள தமிழ் இலக்கியத் தோட்டம் முதல் முறையாக உலக நாடுகளில் வாழும் சமகாலத் தமிழக் கவிஞர்களின் 78 கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இருமொழி நூலாக வெளியிட்டுள்ளது. ஈழத்துக் கவிதைகள் பெரும்பாலும் யுத்த சூழலின் அச்சுறுத்தல், அதன் காரணமான இடம் பெயர்தல் ஆகியவற்றின் சாட்சிகளாக உள்ளன. தமிழ்க் கவிதைகள் பெண்ணடிமைத்தனம், காதல், பிரிவுத் துயர் என்ற உணர்வுகளின் வெளிப்பாடாகும். புலம் பெயர் கவிதைகள் தாய் மண்ணின் ஏக்கத்தையும், தவிப்பையும் வெளிப்படுத்துகின்றன. முழு உலகுடனும் தமிழ் உறவாட இம்மொழிபெயர்ப்புக் கவிதைகள் அவசியமாகின்றன. தமிழ் அடையாளத்தின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது சிறப்பு. நன்றி: குமுதம், 9/4/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *