பிரபலமானவர்களின் வெற்றி ரகசியங்கள்

பிரபலமானவர்களிள் வெற்றி ரகசியங்கள், ஜி. மீனாட்சி, திருவரசு புத்தக நிலையம், சென்னை, பக். 152, விலை 100ரூ.

பிரபலங்கள் யார்? அந்த நிலையை அடைய அவர்கள் கடந்து வந்த பாதைதான் என்ன? பிரபலமானால் மட்டும் போதுமா? என்பது தொடர்பாக பல்வேறு துறைகளில் பிரபலமாக உள்ள 25 பேரை நேரடியாகச் சந்தித்து எடுக்கப்பட்ட நேர்காணல்களின் தொகுப்பு. முதலாவது கட்டுரை பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பற்றியது, தான் இன்று பிரபலமானாலும், சாதி சங்கங்கள், கட்சிகளிலோ சேராதே, படிப்பு, திறமையில் உன்னை விட உயர்வான இடத்தில் இருக்கிறவர்களைப் பார். பண விஷயத்தில் உன்னைக் காட்டிலும் ஏழ்மை நிலையிலிருக்கறவங்களைப் பார் என எனது தந்தையார் கூறிய வேத மந்திரத்தை இன்றளவும் பின்பற்றுவதாகவும், அதுவே தனது வெற்றி மந்திரம் என்கிறார். உண்மைகளை ஓங்கிச் சொல்ல எனக்குத் தைரியம் இருக்கிறது என வைரமுத்துவின் பேட்டியும் அருமை. அரசு விருது கிடைக்கலையே என்ற பரவை முனியம்மாவின் பேட்டி, முஸ்லிம் பெண்ணாகப் பிறந்து தமிழின்பால் கொண்ட ஆர்வம் காரணமாக, இன்று உலக அளவில் பிரபலமாகியிருக்கும் மேடை பேச்சாளர் பர்வின் சுல்தானா பேட்டி, சென்னை கலாக்ஷேத்ரிவின் தனஞ்ஜயன் சாந்தாவின் நாட்டிய தம்பதிகள், பெண் உரிமைக்காகப் போராடும் அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் உ. வாசுகி, பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், இலக்கியவாதி தமிழரு மணியன், சுற்றுச் சூழல் ஆர்வலர் ஓசை காளிதாஸ் உள்ளிட்ட பிரபலங்களின் பேட்டிகளும் இந்நூலில் அடக்கம். பத்திரிகைகளில் இந்த நேர்காணல்கள் வெளிவந்திருந்தாலும் புத்தக வடிவில் வெளிவிந்திருப்பது ஒரு வரப்பிரசாதம். நன்றி: தினமணி, 20/10/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *