பிரபல கொலை வழக்குகள்

பிரபல கொலை வழக்குகள், எஸ்பி. சொக்கலிங்கம், கிழக்குப் பதிப்பகம், 57, பி.எம்.ஜி. காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தி.நகர், சென்னை – 17, பக்கம்: 200, விலை: ரூ.140. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-787-9.html

ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு வகையான வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கு வரும். அவற்றில் சில மட்டுமே மக்கள் கவனத்தை ஈர்த்து, பிரபலமாகின்றன. அப்படி பிரபலமான வழக்குகள் சிலவற்றின் தொகுப்பே இந்நூல். ஆஷ்துரை கொலை வழக்கு, சிங்கம்பட்டி கொலைவழக்கு, லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, ஆளவந்தான் கொலை வழக்கு, எம்.ஜி.ஆர். சுடப்பட்ட வழக்கு, விஷஊசி வழக்கு என்று மொத்தம் 10 வழக்குகள். க்ரைம் நாவல்களை மிஞ்சும் விதத்தில், வழக்குகளின் பின்னணி விசாரணைத் தகவல்கள் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் நூலில் இடம்பெற்றுள்ளன. வழக்கறிஞரான எஸ்.பி. சொக்கலிங்கம் நடையில் படிப்போர் மனதை பதைபதிக்க வைக்கிறார் நன்றி: குமுதம் (3.4.2013)  

—-

 

எம். எஃப். உசேன், இந்திய சமகால ஓவியக் கலையின் முன்னோடி – ஓவியர் புகழேந்தி, வெளியீடு: தூரிகை, எஸ்பி – 63, 3 வது தெரு, முதல் செக்டார், கலைஞர் நகர், சென்னை – 600078.

எம்.எஃப்.உசேன் என்ற மகத்தான ஓவியரின் கலை சார்ந்த மகத்துவங்கள், அவரைச்சுற்றி நிகழ்ந்த அரசியல் வெறுப்பின் இருட்டினால் மறக்கப்பட்டு விட்டது. இந்தியக் கடவுள்களையும் இந்திய மாதாவையும் ஆபாசமாக வரைந்தார் என்றும் நாட்டை விட்டு துரத்தப்பட்டு எங்கோ அகதியாக மடிந்தார் என்பதும்தான் அவரைப்பற்றி இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பொது கருத்து. அவர்மேல் நிகழ்த்தப்பட்ட வெற்றி, இந்தியாவின் கலைசார்ந்த மனசாட்சியின் மீது மதவாதம் அடைந்த ஒரு வெற்றி எனலாம். இந்த அரசியல் பிம்பத்தை தாண்டி உசேனின் வாழ்வையும் கலையையும் மிக ஆழமாக நெருங்கிச் சென்று தொடுகிறது இந்தநூல். இந்தியாவின் நவீன ஓவியக் கலைக்கு உசேன் ஆற்றிய மகத்தான பங்கினை கோட்பாட்டுரீதியாகவும் அழகியல்ரீதியாகவும் நிறுவுகிறார் புகழேந்தி. நன்றி: குங்குமம் (1.4.2013).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *