பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல்
பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல், பிளாக்ஹோல் பப்ளிகேஷன், 7/1, மூன்றாவது அவென்யூ, அசோக் நகர்,சென்னை 83, விலை 100ரூ.
எகிப்தில் உள்ள பிரமிடுகள், கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எகிப்திய மன்னர்கள், அரசிகள் ஆகியோரின் சடலங்களை பாதுகாக்க இந்த பிரமிடுகள் கட்டப்பட்டன. சடலங்களுடன் உள்ளே வைக்கப்பட்ட தங்கம், வைரம், வைடூரியம் முதலிய விலை உயர்ந்த பொருட்கள் பிற்காலத்தில் கொள்ளையடிக்கப்பட்டன. மாலை நேரத்துக்குப் பின் பிரமிடுக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பால்பிரண்டன் என்ற இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி, இரவு நேரத்தில் பிரமிடுக்குள் தங்கினார். அங்கு கெட்ட ஆவிகளும், நல்ல ஆவிகளும் அலைந்து திரிவதை உணர்ந்தார். மேலும் பல அதிசய அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டன. இதுபற்றி என். கணேசன் எழுதிய இந்த நூல், நமக்கு புதிய அனுபவத்தைத் தருகிறது. படிக்க வேண்டிய புத்தகம். நன்றி – தினத்தந்தி, 31 அக்டோபர் 2012.