புத்தகம் பற்றிய புத்தகம்
புத்தகம் பற்றிய புத்தகம், ஜெ. வீரநாதன், எஸென்ஷியல் பப்ளிகேஷன்ஸ், 167ஏ, போலீஸ் கந்தசாமி வீதி, ஒலிம்பஸ், கணேசபுரம், ராமநாதபுரம், கேவை 45, பக், 322, விலை 275ரூ.
புத்தகம் எழுதுவது முதல் தொகுத்தல் அச்சிடுதல், பதிப்புரிமை பெறுதல், காப்புரிமை பெறுதல், வாசகர்களிடம் புத்தகத்தை அறிமுகம் செய்தல், இணைய புத்தகம் உருவாக்குதல் என அறிமுக எழுத்தாளர்கள் முதல் மூத்த எழுத்தாளர்களுக்குவரை அரிய தகவல்களை அள்ளித் தரும் வித்தியாசமான நூல் இது. இந்தப் புத்தகத்தை படித்தால் புத்தகம் எழுதும் ஆசை நிச்சயம் தூண்டிவிடும். புத்தகம் தோன்றிய வரலாறு, காகிதம், மை, அச்சுக்கலை உருவான வரலாறுகள், உலகையே புரட்டிப் போட்ட புத்தகங்கள், சர்வதேச புகழ் பெற்ற இலக்கியப் புத்தகங்கள், உலகின் சிறந்த நூல்கள், நூலக வரலாறு, எழுத்துக்கள், எழுத்தாளர்கள், புத்தகங்களைத் தேர்வு செய்யும் முறை, புத்தகம் எழுதும் முறை, காப்புரிமை பெறுதல் என பல அரிய தகவல்கள் அடங்கிய புத்தகம் பற்றிய பெட்டகமாக காட்சி அளிக்கிறது இந்நூல். இதுபோன்ற அரிய நூல்கள் வெளிவருவதன் மூலம் தமிழில்வரும் புத்தகங்களின் தரம் மேலும் உயரும். தமிழ் இணையப் புத்தகங்களை எழுதும் ஆர்வத்தை அதிகரிக்கவும் இது தூண்டுகோலாக இருக்கும். நன்றி: தினமணி, 2/12/13.
—-
இடி அமீன், குன்றில் குமார், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், ஜானி ஜானிகான் சாலை, சென்னை 14, விலை 60ரூ.
உலகம் பல சர்வாதிகளைக் கண்டிருக்கிறது. ஆனால் கொடுங்கோலர்களின் கதை வித்தியாசமானது. உலக மக்களால் மறக்கவும் மன்னிக்கவும் முடியாத கொடுங்கோலன் இடிஅமீனின் வரலாற்றைச் சொல்லும் நூல் இது. இடிஅமீன் ஆட்சியில் நடந்த திகிலூட்டும் சம்பவங்களை இந்த நூல் விவரிக்கிறது. நன்றி; இந்தியா டுடே, 11/12/13.