பையர் பிவேர்

பையர் பிவேர், ஆர். குமார், சி. சீதாராமன் அண்டு கோ வெளியீடு, பக். 142, விலை 160ரூ.

சொத்து வாங்கவோருக்கான போதுமான அடிப்படை சட்ட நுணுக்கங்களையும் வழிமுறைகளையும் விளக்கும், வழிகாட்டுதல் நூல் இது. இதில், அசையா சொத்துகளை வாங்கும்போதும், விற்கும்போதும் கடைபிடிக்கப்படும் அனைத்து சட்ட நுணுக்கங்கள், நடைமுறை கோட்பாடுகள் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளன. பட்டா, சிட்டா, அடங்கல், கிஸ்தி ரசீது, நிலம் எந்தப் பிரிவின் கீழ் வருகிறது போன்றவற்றின் அடிப்படை அறிவும், இந்த நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மூதாதையர் சொத்தில், பெண்களுக்குரிய சட்டப்பூர்வமான விதிமுறைகளையும், ஆசிரியர் நன்கு தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், ‘லேண்ட் ஷேர்’, அடுக்குமாடிகளில் மேல்தள உரிமை, பொது பகுதி பற்றிய விளக்கம், பவர் ஆப் அட்டர்னி’ ஆவணங்கள் பதிவு மற்றும் வெளிநாடுகளில் செயல்படுத்தப்பட்ட சட்ட முறைகள் பற்றியும் இந்த நூல் விவரிக்கிறது. பட்டா, சிட்டா, அடங்கல், சொத்துக்கு உரிமை கோரல், ‘சேல் டீட், அடுக்குமாடி குடியிருப்பு உரிமைக்கான மாதிரி படிவங்களும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினமலர், 29/3/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *