பொன்மொழிகளும் புண் மொழிகளும்
பொன்மொழிகளும் புண் மொழிகளும், வெண்ணிற ஆடை மூர்த்தி, குமுதம் புதுத்தகம், சென்னை, பக். 88, விலை 75ரூ.
வெண்ணிற ஆடை மூர்த்தி, தான் பார்த்த, படித்த, கேட்ட தகவல்களை தொகுத்து, குமுதம் புதுத்தகம் வாயிலாக நூலாக உருவாக்கியிருக்கிறார். இந்தியா, அமெரிக்கா, டச், ஸ்விஸ், இங்கிலாந்து உள்ளிட்ட சுமார் 48 உலக நாடுகளின் பொன்மொழிகள் இதில் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு புதுசெய்தியை நமக்கு உணர்த்துவதாக உள்ளது. பழமரத்தை நட்டவன், அநேகமாக அதன் பழங்களை நசுக்க வாய்ப்பு இருக்காது. இது டச் பொன்மொழி. இதுபோன்ற பயனுள்ள பொன்மொழிகள் ஏராளம். இவற்றோடு சில புண் மொழிகளையும் தந்துள்ளார். அவை அத்தனையும் தமாஷான வரிகள். நன்றி: குமுதம், 9/4/2014.
—-
சேது காப்பியம் (இனியகாண் காண்டம்), பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், கவியரசன் பதிப்பகம், சென்னை, பக். 464, விலை 550ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-224-4.html
சேது காப்பியம் என்ற பெயரில் சமகாலத் தமிழர்களின் சமூகம், அரசியல், கலை, திரைப்படம், இதழியல் சார்ந்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட முன்னுதாரணக் காப்பியமாக படைத்துத் தந்துள்ளார் பெருங்கவிக்கோ. ஐந்தாவது காண்டமான இந்நூல், வாழ்வியற் கூறுகளையும் வரலாற்றுக் கூறுகளையும் உள்ளடக்கமாகக் கொண்டிருப்பது தனிச் சிறப்பு. காப்பியத் தலைவர் அருள்மொழியன், அவரது துணைவி சேதுபதி ஆகியோரின் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட அல்லல்களை சுவைமிக்க பாக்களால் ஆக்கியதோடு நில்லாமல், அதை சமகாலத் தமிழ்நாட்டு வரலாற்றுப் பின்புலத்துடன் விரிவாக விளக்கியுள்ளார். இது ஒரு எழுச்சிமிகு வரலாற்றுக் காப்பியமாகும். நன்றி: குமுதம், 9/4/2014.