மகாகவி பாரதியார் கவிதைகள்
மகாகவி பாரதியார் கவிதைகள், ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 300ரூ.
மகாகவி பாரதியார் கவிதைகள், வசன கவிதைகள் அடங்கிய முழுத் தொகுப்பு வெளியிடப்பட்டுள்ளது. 664 பக்கங்கள் கொண்ட புத்தகத்தின் விலை 300ரூ. மகாகவி பாரதியார் எழுதிய கட்டுரைகள் கொண்ட நூலும் வெளிவந்துள்ளது. 440 பக்கங்கள் கொண்ட புத்தகம். விலை 275ரூ. பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் என்ற நூலும் வெளியிடப்பட்டுள்ளது. 480 பக்கங்கள். விலை 275ரூ. மேற்கண்ட புத்தகங்களின் பதிப்பாசிரியர் டி. சுப்புலட்சுமி. 3 நூல்களையும் வெளியிட்டோர் ஜீவா பதிப்பகம். நன்றி: தினத்தந்தி, 31/12/2014.
—-
இதிகாசங்களில் போர்க்களங்கள், எஸ். ஜெகத்ரட்சன், ஆழ்வார்கள் ஆய்வு மையம் வெளியீடு, சென்னை, விலை 250ரூ.
வைணவ இலக்கியத்தின் அனைத்துக் கூறுகளையும் தெளிவுற பயின்று பல அரிய நூல்களைப் படைத்து இருக்கும் எஸ். ஜெகத்ரட்சன் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களின் முக்கிய நிகழ்வுக்குக் காரணமான ராமர் – ராவணர் யுத்தம், குருஷேத்திர போர் ஆகியவை பற்றிய அரிய தகவல்களை சுவைபட இந்த நூலில் தந்து இருக்கிறார்.- அவர் விவரிக்கும் போர்க் காட்சிகள் மற்றும் படைகளின் எண்ணிக்கை விவரங்கள் அதிசயிக்க வைக்கின்றன. போர்க்காட்சிகள் பற்றிய கம்பர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆழ்வார் ஆகியோரின் கவிதைகளையும் தந்து, அவற்றுக்கு எளிய முறையில் அதே சமயம் விறுவிறுப்பான முறையில் விளக்கம் தந்து இருப்பதன் மூலம், நம்மை அந்த போர்க்களங்களுக்கே நேரில் அழைத்துச் சென்று மெய்சிலிர்க்க வைத்து இருப்பதில் வெற்றி பெற்று இருக்கிறார் ஆசிரியர். நன்றி: தினத்தந்தி, 31/12/2014.