ஆன்மாவின் பயணங்கள்
ஆன்மாவின் பயணங்கள், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 280, விலை 210ரூ.
நம் உடலை இயக்கும் ஆன்மா குறித்து, இந்த நூல் தெளிவாகக் கூறுகிறது. இந்த நூலில் கூறப்பட்டுள்ள சில பயிற்சிகள், தனக்கும் கடினமாக இன்று வரை இருந்து வருவதாகவும், வாசகர்கள் சலிப்படைய வேண்டாம் என்றும் ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார் (பக். 19). ஆன்மா உடலை விட்டு நீங்கியபின், பல்வேறு உணர்வு நிலைக்கு செல்கிறது, தலைகீழாக எண்ணுவது ஒரு சிறந்த ஆழ்நிலை ஏற்படுத்தும் உத்தி, நெற்றியில் தட்டுவதன் மூலம், மனோவசிய நிலை மேலும் ஆழமாகி, நினைவுகூரல் திறன் அதிகரிக்கிறது. குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளன என்று கூறுகிறார் ஆசிரியர். சில பேருக்கு எதிர்மறை மரணவாயில் அனுபவம் நேர்வதுண்டு என்றும் (பக். 183), மனோதத்துவ ஆய்வு என்பது ஆன்மிக தன்மையை புறக்கணிக்கும் வறட்டு தன்மை கொண்டது என்றும் (பக். 199), எல்லா மதங்களிலும் மகத்தான உண்மை, அழகு, ஞானம் ஆகியன பொதிந்துள்ளன என்றும்(பக். 199), எல்லா மதங்களிலும் மகத்தான உண்மை, அழகு, ஞானம் ஆகியன பொதிந்துள்ளன என்றும் (பக். 253), இந்த நூல் விவரிக்கிறது. -டாக்டர் கலியன் சம்பத்து. நன்றி: தினமலர், 8/3/2015.
—-
நானும் என் ‘நான்’களும், உமா சுப்பிரமணியன், அழகிய தமிழ் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
நம் ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை நான், அகந்ததை நான், அதிகார நான், தன்முனைப்பு நான், தன்னம்பிக்கை நான் என பல்வேறு நான்கள் உள்ளன. புதிராகவும், தத்துவமாகவும் அமைந்த இந்த நூலின் தலைப்புக்கு ஏற்றாற் போன்று எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் சிந்திக்க வைப்பதுடன் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் திகழ்கின்றன. நன்றி: தினத்தந்தி, 28/1/2015.