மகாபாரதம் ஒரு கண்ணோட்டம்
மகாபாரதம் ஒரு கண்ணோட்டம், டி.ஆர்.குப்புசாமி, பக். 552, விலை 350ரூ.
மகாபாரதத்தின் நீள அகலங்களில் ஆழங்கால் பதித்துள்ள நூலாசிரியர், 40 அத்தியாயங்களில், இந்தக் காப்பியத்தின் இதிகாசத்தின் அற்புதச் சொல்லாடங்களை, கருத்துச் செல்வங்களை எழுதியிருக்கிறார். படிப்பதற்கு சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கிய மகாபாரதத்தில் தர்ம-அதர்ம யுத்தம் கவனத்தை கவரக்கூடியது. படிக்கப் படிக்க இனிக்கும் மகாபாரத நூல் வரிசையில், இந்தப் புத்தகத்திற்கு முன்னுரிமை வழங்கலாம். குறிப்பாக சமஸ்கிருத சுலோகங்களைத் தமிழிலேயே எழுதி அதற்கான விளக்கம், விரிவுரையே பழகு தமிழில் ஆசிரியர் எழுதியிருக்கிறார். இதிகாசங்கள் மீது நூலாசிரியருக்கு உள்ள ஈடுபாடும், புலமையும் பாராட்டிற்குரியது. -ஜனகன்.
—-
காக்கியின் கதீர்வீச்சு, பெ. மாடசாமி, டிபிஎஸ், விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம்புத்தூர் 641001, பக். 248, விலை 140ரூ.
பெ. மாடசாமி தமிழில் கட்டுரை, கவிதை எழுதுவது மட்டுமின்றி நல்ல பேச்சாளர், 34 ஆண்டுகள் தமிழக காவல் துறையில் பணியாற்றியவர். தம் வாழ்க்கை அனுபவங்களை, புதுக்கவிதை தமிழில் மிகவும் சுவைபட எழுதியிருக்கிறார். இயல்பாய் காக்கிக்கு ஒரு கவர்ச்சியுண்டு. கவன ஈர்ப்புண்டு. 50பேர் நடுவில் ஆங்கொரு காவலரைக் கண்டிட்டால், அனைவரும் கலைந்திடுவார். அவர் பார்த்துக் கொள்வார் என, அப்படியொரு அதிகாரத்துவம் காக்கிக்கு என்று எழுதிச் செல்கிறார். -எஸ். குரு. நன்றி: தினமலர், 5/1/14.