மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள்
மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள், தந்தி பதிப்பகம், சென்னை, விலை 165ரூ.
வளமுடன் நலமுடன் வாழ்க என்பதே ஒருவொருக்கொருவர் பரிமாறுகின்ற வாழ்த்துச் சொல்லாகும். அந்த வகையில் செல்வவளம் பெருகச் செய்யும் மந்திரங்கள், திருமணத் தடை விலகச் செய்யும் மந்திரங்கள், கடன் தொல்லை தீர்க்கும் மந்திரங்கள், கல்விச் செல்வம் வழங்கும் மந்திரங்கள், சொந்த வீடு அமைய வழிகாட்டும் மந்திரங்கள், சந்தான பாக்கியம் தரும் மந்திரங்கள், உடல் நலம் காக்கும் உன்னத மந்திரங்கள் என்று 25 தலைப்புகளில் மகிழ்ச்சியான வாழ்வுக்குரிய இந்து மந்திரங்களை ஸ்ரீ ஜானகிராம் இந்த நூலில் சொல்லித் தருகிறார். நூலை ஆங்காங்கே அலங்கரிக்கும் இந்து கடவுளர்களின் வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன. நன்றி: தினத்தந்தி, 4/2/2015.
—-
தொல்காப்பியத்தின் அமைப்பும் சிறப்பும், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், விலை 110ரூ.
செவ்வியல் தமிழ் மொழியின் அமைப்பியல், இலக்கியத்தின் அமைப்பியல், மக்களின் வாழ்வியல் என்ற முப்பொருளைப் பற்றியும் முறையாக விளக்கும் முதன்மை நூலாகத் தொல்காப்பியம் திகழ்கிறது. தொல்காப்பியம் முழுமை பெற்ற முதல் உலக இலக்கணம் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறார் முனைவர் சோ.நா. கந்தசாமி. நன்றி: தினத்தந்தி, 11/2/2015.