மக்கள் தோழர் ஜோதிபாசு
மக்கள் தோழர் ஜோதிபாசு, நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 170ரூ.
மேற்கு வங்க மாநிலத்தின் வரலாற்றோடு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்திய அரசியல் வரலாற்றோடு கலந்து விட்ட மகத்தான தலைவர் ஜோதி பாசு. இந்தியாவில் கம்யூனிச இயக்கத்திற்கு மிகப்பெரும் கவுரவத்தை ஏற்படுத்தியவர். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிச்சுடராக திகழ்ந்த ஜோதிபாசுவின் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல் இது. லண்டனில் சட்டம் பயின்ற ஜோதி பாசு வக்கீல் தொழிலை தூக்கியெறிந்துவிட்டு மக்கள் பணிக்காக களத்தில் குதித்தார். சட்டமன்ற உறுப்பினராகி துணை முதல்வரானார். பின் முதல்வரானார். 23 ஆண்டுகள் மாநில முதல்வராக இருந்து சாதனை படைத்தார். தானே முன்வந்து முதல்வர் பொறுப்பிலிருந்து விலகினார். அவரது இளமைக்காலம் முதல் இறுதி மூச்சுவரை ஒவ்வொரு நிகழ்வையும் அழகாக வரிசைப்படுத்தி எழுதியுள்ளார் ஆதனூர் சோழன். ஜோதிபாசு பற்றி நிறைய படங்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 19/11/2014.
—-
சனிப்பெயர்ச்சி பலன்கள் (2014-2017), விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 30ரூ.
சனிப்பெயர்ச்சி பலன்களையும், பரிகாரங்களையும் அகத்தியர் ஓலைச் சுவடியின் அடிப்படையில் விளக்கமாகக் கூறியுள்ளார் அதர்வணஸ்ரீ அண்ணா சுவாமிகள். நன்றி: தினத்தந்தி, 19/11/2014.
—-
சலவைத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறைகள், எம்.டி. அருண்மொழி நங்கை, திருக்குறள் பதிப்பகம், சென்னை, விலை 80ரூ.
சலவைத் தொழிலாளர்களின் வாழ்க்கை வரலாற, அவர்கள் பின்பற்றும் சடங்குகளும், நம்பிக்கைகளும், பண்பாட்டுக்கூறுகளும், கலைகளும் மற்றம் தொழில் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர் நூலாசிரியர். இவர் இந்த ஆய்வுகளை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் நூலாக தொகுத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 19/11/2014.