மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள், உயிர்மை பதிப்பகம், சென்னை, விலை 135ரூ.
பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு வார இதழ்களில் பிரசுரிக்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு. இதில் 25 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. மொழியின் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுக்கும் உணர்வுகளின் சிக்கல்களுக்கு வடிகால் இல்லாமல், பெரும்பாலோர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களது உணர்வுகளுக்கு வடிகாலாக, யூகிக்க முடியாத திருப்பங்களுடன் கதையோடு ஒன்றச் செய்யும்வகையில், சுவாரஸ்யமான சம்பவங்களுடன் விறுவிறுப்பான நடையில் சிறுகதைகளை படைத்திருக்கிறார், நூலாசிரியர் தமிழ்மகன். நன்றி: தினத்தந்தி, 24/3/2015.
—-
காமராஜர், மு.கோபி சரபோஜி, கிழக்கு பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
தூய்மையின் அடையாளமாக, எளிமைக்கு ஓர் உதாரணமாக வாழ்ந்தவர் பெருந்தலைவர் காமராஜர். அவரது ஆட்சிக் காலத்தில் கல்வி, தொழில் வளம், மருத்துவம் ஆகிய துறைகளில் தமிழகம் உச்சத்தைத் தொட்டது. இதைத் தொடர்ந்து அகில இந்திய அளவிலும் அவர் மாபெரும் சக்தியாக விளங்கினார். காமராஜரைப் பற்றி பல்வேறு நூல்கள் வெளிவந்திருந்த போதிலும், அவரது அசாத்தியமான வாழ்வையும், அரசியல் பங்களிப்பையும் மு.கோபி சரபோஜி எளிமையாக அறிமுகப்படுத்தியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 24/3/2015.